ETV Bharat / business

சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்வு

14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ. 942-க்கு விற்பனையாகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 1:25 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 10.50 உயர்த்தப்பட்டு, ரூ. 2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை உடைய சிலிண்டர், 5 கிலோ சிலிண்டர் மற்றும் விமானத்திற்கான எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 9.50 உயர்த்தப்பட்டு, ரூ. 2,747.50-க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ரூ. 10.50 உயர்த்தப்பட்டு, ஒரு சிலிண்டர் ரூ. 2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவைமட்டுமின்றி, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டு, ரூ. 764-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி மாதம் தொடங்கிய மேற்கு ஆசியா போர் காரணமாக கடந்த ஜூன் மாதம் வரையில் எரிப்பொருளின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதனையடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி ரூ. 183.5 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதி ரூ. 192 என தொடர்ந்து இரண்டு முறை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ANI)
இதையும் படிங்க: பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ. 35-க்கு விற்பனை; கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு நடவடிக்கை

விமான எரிவாயு விலை உயர்வு

இதே போன்று, விமானத்திற்கான எரிவாயுவின் விலையையும் பல மடங்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஒரு லிட்டருக்கு ரூ. 6.28 அதிகரிக்கப்பட்டு, ரூ. 121.28-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 1-ம் தேதி லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டாம் முறை உயர்த்தப்பட்டுள்ளது.

14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ. 942-க்கு விற்பனையாகிறது. கடந்த ஜூன் 7-ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ. 29 உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று, பெட்ரோல், டீசல் விலையும் கடந்த மே மாதத்திற்கு பின்னர் மாற்றமின்றி தொடர்கிறது.