ETV Bharat / bharat

ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகள்; சிறந்த அனிமேட்டர் விருதை பெற்றார் உன்னிகிருஷ்ணன்

விருது பெற்ற வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, கோப்பை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ETV பால் பாரத் பதக்கம் மற்றும் ராமோஜி பிலிம் சிட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் நுழைவுச்சீட்டும் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கிய ETPL இயக்குநர் பூர்ண சுஜய செருகூரி
வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கிய ETPL இயக்குநர் பூர்ண சுஜய செருகூரி (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 8:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மும்பை: ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில், '2026-ஆம் ஆண்டின் சிறந்த இளம் அனிமேட்டர்' விருதை இளம் அனிமேட்டரான உன்னிகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

மும்பையில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில், ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகள் (RAEA) வழங்கும் விழா நடைபெற்றது. அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கும், புதுமைகளை புகுத்தியவர்களை சிறப்பிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில், '2026-ஆம் ஆண்டின் சிறந்த இளம் அனிமேட்டர்' விருது, இளம் அனிமேட்டரான உன்னிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. அதே போல 2026ஆம் ஆண்டின் சிறந்த இண்டி (INDIE) ஸ்டூடியோ விருது, ENTANGLED STUDIO-வுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை, ஈநாடு டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் (ETPL) பூர்ண சுஜய செருகூரி வழங்கினார்.

தொழில்துறையில் படைப்பாற்றல், புதுமை மற்றும் கலை சாதனைகளை கொண்டாடவே, RAEA விருதுகள் வழங்கப்படுவதாக விருதுக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும், திரு. ராமோஜி ராவின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, திறமைகளை ஊக்குவிக்கவும், இந்திய அனிமேஷனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் படைப்பாளிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், இந்த விருதுகளின் நோக்கம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ந்து வரும் அனிமேஷன் சூழலில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கவும், அடுத்தகட்டத்திற்கு அவர்களை கொண்டுசெல்ல இந்த விருது ஊக்குவிக்கும் எனவும் விருதுக்குழு தெரிவித்துள்ளது.

ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகள் : AnimationXPress பாராட்டு

மும்பையில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 8வது அனிமேஷன் & MORE (AM) உச்சிமாநாடு மற்றும் ANN விருதுகள் 2026 விழாவை அனிமேஷன் எக்ஸ்பிரஸ் நடத்தியது.

இது குறித்து அனிமேஷன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகளை "மிகவும் மதிப்புமிக்கவை" என்று குறிப்பிட்டது. பல ஆண்டுகளாக, ANN விருதுகள் அனிமேஷன், VFX, கேமிங், காமிக்ஸ் மற்றும் XR துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டாடி வருகின்றன. மேலும், படைப்புலகத்தை தொடர்ந்து வடிவமைத்து வரும் சிறந்த திறமையையும் புதுமையையும் அங்கீகரித்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், மறைந்த ராமோஜி ராவ் அவர்களின் அசாதாரணமான பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, ராமோஜி அனிமேஷன் சிறப்பு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த நிகழ்வு மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பிரத்யேக ராமோஜி அனிமேஷன் எக்ஸலன்ஸ் விருதுகள் கோப்பையும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ETV பால் பாரத் பதக்கமும், வெற்றி பெற்றவருடன் ஒரு விருந்தினர் ராமோஜி பிலிம் சிட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் நுழைவுச்சீட்டும் வழங்கப்பட்டன.