குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை; திரௌபதி முர்மு திறந்து வைத்தார்
1959-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ராஜாஜி, சுதந்திரா கட்சியை தொடங்கி 1962, 1967, 1971 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிட்டார்.

By ANI
Published : February 23, 2026 at 6:30 PM IST
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழகத்தை சேர்ந்தவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான மூத்த தலைவர் ராஜாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பொறுபேற்றது முதல் ஆங்கிலேயர் ஆட்சியின் புகழை போற்றும் அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக இந்தியாவின் முக்கிய தலைவர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை கௌரவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தலைநகர் புதுடெல்லியில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் மெல்ல அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக ரூ.900 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்டடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'சேவா தீர்த்' என்ற பெயரில் மத்திய அமைச்சரவை செயலகம், பிரதமரின் அலுவலகம், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகங்கள் அடங்கிய வளாகத்தை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், புதுடெல்லியில் முக்கிய அரசு கட்டடங்கள் அமைந்துள்ள சௌத் பிளாக், நார்த் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை கட்டிய பிரிட்டிஷ் கட்டட கலைஞர் எட்வின் லூட்யன் நினைவாக அவரது சிலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறுவப்பட்டிருந்தது.
அந்த சிலை தற்போது அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் இருந்த மூதறிஞர் ராஜாஜியின் சிலை அங்கு நிறுவப்பட்டது.
மேலும், இந்த சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு ராஜாஜியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருண்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
யார் இந்த ராஜாஜி?
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி கிரமாத்தில் 1878 ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜாஜி. வைக்கம் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்யாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்து கொண்டார்.
1937-ல் மதாராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக தேர்வானார். 1946-ல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் அமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1948 முதல் 1950 வரை கவர்னர் ஜெனரலாக பணியாற்றினர்.
தொடர்ந்து 1951 முதல் 54 வரை மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். 1959-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அவர், சுதந்திரா கட்சியை தொடங்கி 1962, 1967, 1971 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிட்டார்.

