நேபாளத்தில் இருந்து பத்திரமாக டெல்லி திரும்பிய 21 தமிழர்கள் ; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு
21 தமிழர்களை மீட்ட நேபாள ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Published : August 28, 2026 at 6:03 PM IST
டெல்லி: நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
நேபாளத்தில் நேற்று முன்தினம் (ஆக..26) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திபெத்திய எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எல்லையில் இருந்து நேபாளத்தின் மத்திய பகுதி வரை இடைவிடாமல் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன். இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் (@NepaliArmyHQ) மற்றும் அந்நாட்டு அரசுக்கு… pic.twitter.com/X5n0Of8J2O
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 28, 2026
இவர்களில் கம்பகோணத்தில் இருந்து பிரபல சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாள கைலாஷ் யாத்திரை சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்றும் சென்னையில் இருந்து சென்றவர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை.
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்தவர்களை குறித்து அறிந்துகொள்ள நேபாள வெளியுறுவுத்துறையின் மூலம் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வருகை
இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அவருடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார்.
Moving to hear experiences of rescued pilgrims. pic.twitter.com/bg9tSofA1H
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 28, 2026
| இதையும் படிங்க: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டூ காளான் தொழில்| 6 மாதத்தில் ரூ. 40 லட்சம் சம்பாதித்து அசத்திய இளைஞர் |
மேலும், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் 21 பேரும் பகிர்ந்தனர். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
நேபாள அரசுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன்.
இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் (@NepaliArmyHQ) மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமூகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் (@IndiaInNepal) பணிகளைப் பாராட்டுகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

