ETV Bharat / bharat

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பாஜகவுடன் தொகுதி பங்கிட்டை இறுதி செய்த பிறகு, மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து, அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 10:06 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் வாயிலாக தொகுதி பங்கீட்டுக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது. முதலாவதாக பாஜகவுடன் தொகுதி பங்கிட்டை இறுதி செய்த பிறகு, மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து, அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.