ETV Bharat / bharat

கடைசி விளையாட்டுத் திடலான பூங்காக்களை காப்போம்: டெல்லி காவல் துறையின் 'ஆபரேஷன் விமுக்த்' திட்டம்

பூங்காக்களுக்கு பொதுமக்கள் மீண்டும் வருவதாலும், குழந்தைகள் விளையாடுவதாலும், முதியவர்கள் தயக்கமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் ஒரு நகரத்தில் குற்றங்கள் குறைகின்றன. அத்துடன் அந்த நகரம் பொதுவாழ்வையும் மீட்டெடுக்கிறது.

டெல்லி பூங்காக்களின் நிலை - கள நிலவரம்
டெல்லி பூங்காக்களின் நிலை - கள நிலவரம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2026 at 9:04 AM IST

4 Min Read
Choose ETV Bharat

By-தனஞ்செய் வர்மா

இன்றைய ரீல்ஸ் யுகத்தில், பூங்காக்கள், பசுமையை நாடுபவர்களுக்கான இடமாக மட்டும் இல்லாமல், வழக்கமான, சலிப்பான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபடுவோருக்கான இடமாக பரிணமித்துள்ளன.

பூங்காக்கள், விளையாட்டு மைதானமாகவும், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், நடைப்பயிற்சி பாதைகளாகவும், ஓய்வெடுக்கும் இடமாகவும், புத்துணர்ச்சி பெறும் இடமாகவும் மாறி உள்ளன. பூங்காக்களைப் போன்று இந்த பங்களிப்பை திறம்பட நிறைவேற்றும் இடங்கள் மிக குறைவாகவே உள்ளன.

ஆனால், பூங்காக்களில் போதைப்பொருள் பயன்பாடு, சமூக விரோதச் செயல்கள், குற்றச் செயல்கள் அரங்கேறும்போது, நாம் இழப்பது இடத்தை மட்டுமல்ல. அதன் மீதான நம்பிக்கை, நமக்கான இடம் என்ற உணர்வையும் பூங்காக்கள் இழக்கின்றன.

மற்ற நகரங்களைப் போன்று டெல்லியில் உள்ள பூங்காக்களும் சமூக, நகர்ப்புற அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. மாலை வேளைகளில் இங்குள்ள பெரும்பாலா பூங்காக்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறி விடுகின்றன. இதனால், பூங்காக்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு வருவதை பெண்கள் தவிர்த்து விடுகிறார்கள். ஒரு காலத்தில் பூங்காவை நேரத்தை கழிப்பதை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக கருதிய முதியவர்களும் தற்போது வருவதில்லை.

டெல்லியில் உள்ள பூங்காக்களை மீண்டும் பாதுகாப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், சமூக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாற்றும் நோக்கத்தில் ஆபரேஷன் விம்யுக்த் திட்டத்தை டெல்லி காவல் துறை தொடங்கி உள்ளது. இந்த சூழலில், ஈடிவி பாரத் முன்னெடுத்துள்ள தி லாஸ்ட் பிளேகிரவுண்ட் பிரச்சாரத்திற்காக, டெல்லியில் உள்ள பூங்காக்களின் பாதுகாப்பை ஆராய்ந்தோம்.

பூங்காக்களை மீட்பது மட்டும் காவல் பணி அல்ல

பூங்காக்களை போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் செயல்கள் நடைபெறாத இடமாக மீட்பதற்கு டெல்லி மேற்கு காவல் துறை துணை ஆணையர் தாரதே சரத் பாஸ்கர் தலைமையின் கீழ் "ஆப்ரேஷன் விமுக்த்" திட்டம் இந்த மாதம் தொடங்கப்பட்டது.

ஆனால், காவல் துறை பூங்காவை மீட்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் செயல்பட்டது. குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள், நடைப்பயிற்சி செல்பவர்கள் ஆகியோரிடம் பூங்காவை மீண்டும் ஒப்படைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பூங்கா தோழி திட்டம்

டெல்லி காவல் துறையின் ஆபரேஷன் விமுக்த் திட்டத்தின் ஒரு பகுதிதான் "பூங்கா நண்பன்" எனப்படும் "பார்க் மித்ரா" திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடியிருப்பு சங்கங்களின் உறுப்பினர்களை தன்னார்வலராக காவல் துறை சேர்த்துக் கொண்டுள்ளது. அவர்கள், பூங்காவில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம், சட்டவிரோத செயல்கள் ஆகியவற்றை கண்காணித்து காவல் துறைக்கு தகவல் அளிப்பார்கள்.

பூங்காக்களில் உள்ள குறைபாடுகள்

டெல்லி காவல் துறை, ஆபரேஷன் விம்யுக்த் திட்டத்தின் கீழ் 265 பூங்காக்களை ஆய்வு செய்து, அவற்றில் அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடக்கும் பூங்காக்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்துள்ளது.

போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாதது

உடைந்த மதில் சுவர்கள் மற்றும் நுழைவு வாயில்கள்

பாதுகாப்பில்லாத மறைவிடங்கள்

நகர்ப்புற பூங்காக்களில் மேற்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பூங்காவின் பாதுகாப்பு என்பது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; பூங்கா பராமரிப்பு, நிர்வாகம் ஆகியவற்றுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

பூங்காக்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய டெல்லி மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து டெல்லி காவல் துறை செயல்பட்டு வருகிறது.

டெல்லி காவல் துறை 15 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில், 444க்கும் அதிமான திடீர் ஆய்வுகள்

325 முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள்

டெல்லி காவல் துறை சட்டத்தின் 65வது பிரிவின் கீழ் 4,598 நடவடிக்கைகள்

டெல்லி காவல் துறை சட்டத்தின் 66வது பிரிவின் கீழ் 445 நடவடிக்கைகள்

55 சிறார்கள் கைது செய்யப்பட்டு, சீர்திருத்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 2 பூங்காக்களில் காவல் சாவடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை காவல் துறையினர் பணியில் இருக்கிறார்கள். அவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கும்பல் குறித்து எவரும் புகார் கொடுக்கலாம். இந்த காவல் சாவடிகள் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்கள். இது, குற்றவாளிகள் மனதில் அச்சத்தை ஆழமாக பதியவைக்கிறது.

இதுகுறித்து டெல்லி காவல் துணை ஆணையர் தராடே சரத் பாஸ்கர் கூறுகையில், "இது குறுகிய கால பிரச்சாரம் அல்ல. வரும் நாட்களில் பூங்கா நண்பர்கள் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சிசிடிவி போன்ற தொழில்நுட்ப வசதிகள் மூலம் கண்காணித்து, எந்த குற்றமும் நடக்காத, எந்த குற்றவாளியும் தப்பிச் செல்ல இயலாத கோட்டைகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

காவல் துறையின் இந்த முயற்சி, தற்போது ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக உருவெடுத்து, டெல்லி முழுவதும் உள்ள பூங்காக்களின் நிலைமை தீவிரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கு டெல்லி முழுவதும் "ஆபரேஷன் விமுக்த்" திட்டம் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. முன்பை போலவே பூங்காக்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காவல் துறையும் பொதுமக்களும் கைகோர்க்கும்போது குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

டெல்லி காவல் துறையின் இந்த முன்மாதிரி முயற்சி, மற்ற மாவட்டங்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கலாம்" என்றார்.

ஆபரேஷன் விமுக்த் - ஒரு நேர்மறையான நடவடிக்கை

டெல்லியில் ஒரு சில இடங்கள் தங்களுக்கு சவாலானதாக இருக்கிறது என்று டெல்லி காவல் துறையினர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் காவல் துறை அதிகாரியுமான வேத் பூஷண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஜனக்புரி காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காங்களில் போதிய மின்வசதிகள் இல்லை. இதனால் அங்குள்ள மறுகுடியமர்வு பகுதிகளில் வசிப்பவர்கள், இரவு நேரங்களில் இந்த பூங்காக்களில் தஞ்சம் அடைந்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பூங்காக்களில் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தபோதிலும், காவல் துறை சரியான பாதையில் செல்கிறது.

இங்குள்ள பூங்காக்களில் காவல் துறை ரோந்து பணியை தொடங்கிய பிறகு சமூக விரோத சக்திகளால் இங்கு வருவதோ அல்லது தங்கியிருக்கவோ இயலாது" என்றார் அவர்.

ஓய்வுக்குப் பிறகும் நாட்டுக்கு சேவை

டெல்லியில் ஆபரேஷன் விமுக்த் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு பல பூங்காக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் காவல் துறை அதிகாரியும், ஆபரேஷன் விமுக்த் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவருமான பல்ஜீத் சிங் ரானா தெரிவித்துள்ளார்.

அவர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்த அவர், தொடர்ச்சியான விழிப்புணர்வும், கண்காணிப்பும் தங்கள் திட்டத்திற்கு உதவிகரமாக இருந்ததாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் தினமும் காலை, மாலை வேளைகளில் பூங்காவுக்கு சென்று, போதைப்பொருள் பயன்பாடு ஒரு தனிநபரை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்திற்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் எப்படி தீங்கு விளைவிக்கிறது என்பதை விளக்கி கூறுகிறேன்" என்றார்.

கடைசி விளையாட்டு மைதானம், கடைசியானதாக இருக்காது

ஆபரேஷன் விமுக்த் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக பூங்கா நண்பர் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, சிசிடிவி மூலம் கண்காணிப்பை அதிகரிக்கச் செய்வது, மக்கள் பங்கேற்பை அதிகரிக்க செய்வது ஆகியவற்றை காவல் துறை மேற்கொள்ள உள்ளது.

பூங்காக்களுக்கு பொதுமக்கள் மீண்டும் வருவதாலும், குழந்தைகள் விளையாடுவதாலும், முதியவர்கள் தயக்கமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் ஒரு நகரத்தில் குற்றங்கள் குறைகின்றன. அத்துடன் அந்த நகரம் பொது வாழ்வையும் மீட்டெடுக்கிறது.