ETV Bharat / bharat

அசாமில் ஹாட்ரிக் வெற்றி: ஆட்சியை தக்க வைத்தது பாஜக

பாஜக தலைமையிலான கூட்டணி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2026 at 12:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

குவஹாத்தி: அசாம் சட்டப் பேரவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பாஜக தலைமையிலான கூட்டணி, 3-வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த கூட்டணி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. அந்த வகையில், அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று இரு முனைப்போட்டி நிலவியது. அதே சமயம் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 27 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது.

மொத்தம் 126-ல் 64 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வந்தது. தேர்தல் கணிப்புகளும் என்டிஏ கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஆட்சியை பிடிக்க 64 தொகுதிகள் தேவை என்ற சூழலில், ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 102 இடங்களில் அபார வெற்றி பெற்றது. அதன்படி, பாஜக 82, இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) 10 தொகுதிகளிலும், அசாம் கண பரிஷத் (AGP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

அதேச மயம் காங்கிரஸ் 19 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) 2 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்திலும், RJRD 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியை அசாம் மாநிலம் முழுவதும் பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில், ஜலுக்​பரி தொகுதி​யில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹிமந்த பிஸ்வா சர்மா 1,27,151 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோக் 37,717 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் பரப்புரை செய்தனர். இந்த பரப்புரை அங்குள்ள இந்துக்களிடையே மதரீதியான சிந்தனையை உருவாக்கி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதுவே என்டிஏ கூட்டணி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாகை சூட காரணம் என்றும் கூறப்படுகிறது.