LIVE: தமிழக வெற்றிக் கழகம் 'கல்வி விருது விழா' நேரலை! - VIJAY EDUCATION AWARD CEREMONY

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2025 at 10:03 AM IST

Updated : June 4, 2025 at 4:54 PM IST

1 Min Read
தவெக சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட 'கல்வி விருது வழங்கும் விழா' மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த 30 தேதி நடைபெற்ற முதல்கட்ட விருது வழங்கும் விழாவில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றனர். இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழாவில் தமிழகம் முழுவதும் 75 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விருதுகளை பெறவுள்ளனர். இந்த விழாவில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 2500 பேர் பங்கேற்றுள்ளனர். விருதுபெற உள்ள மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் தடபுடலாக மதிய உணவு தயாராகி வருகிறது. விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு வெளியே காலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். காவல்துறை மற்றும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் மண்டபத்திற்கு வெளியே தொண்டர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.
Last Updated : June 4, 2025 at 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.