ரஜினியின் உடல்நலத்திற்காக காஞ்சி காமாட்சியை வழிபட்ட சௌந்தர்யா! - SOUNDARYA RAJINIKANTH

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 9, 2025 at 5:33 PM IST

1 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

சக்தி பீடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்தார். 

தனது தந்தை ரஜினிகாந்த் முழு உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், அம்மனை மனமுருகப் பிரார்த்தனை செய்தார். மேலும், உலக மக்கள் அனைவரும் நன்மை பெற வேண்டும் என்ற பொது நல நோக்கத்துடனும் அம்மனின் அருளை நாடி வந்ததாகத் தெரிவித்தார். 

காமாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தை பயபக்தியுடன் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்த பின்னர், கோயிலுக்கு வெளியே காத்திருந்த திருநங்கைகளுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பணம் கொடுத்து உதவி செய்தார். ரஜினிகாந்தின் நலம் மற்றும் உலக நன்மைக்காக அவர் மேற்கொண்ட இந்தப் பிரார்த்தனை மற்றும் அவரது பொதுநலச் செயல்பாடு ஆகியவை கோயில் வளாகத்தில் இருந்த மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details