பாஜக மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன் - நெல்லை குலுங்க பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்! - NAINAR NAGENDRAN
🎬 Watch Now: Feature Video


Published : April 11, 2025 at 8:31 PM IST
திருநெல்வேலி: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவிக்கு திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் இன்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதனை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்கள் நெல்லையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவிக்கு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 11) விருப்ப மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, இப்பதவிக்கு வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள், நயினாரின் தொகுதியான நெல்லை டவுன் வாகையடி முனையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். "தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்" என கோஷமிட்டவாறு அவரது ஆதரவாளர்கள் சாலையில் சென்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.