புதரில் மறைந்திருந்து சட்டென சாலையை கடந்த சிறுத்தை - வைரலாகும் வீடியோ! - LEOPARD CROSSING THE ROAD

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2025 at 6:32 PM IST

1 Min Read

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. வனவிலங்குகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை ஆகியவை தென்படுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு சாலையை கடக்கும் சிறுத்தைகள் அவ்வப்போது வாகனங்களில் சிக்கி அடிப்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.

அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், வனவிலங்குகள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காக சாலையின் இருபுறமும் 12 மீட்டர் தூரம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பது குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையை கடப்பதற்காக தயாராக இருந்த சிறுத்தையை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனை, அங்கிருந்து வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பகுதியில், வாகன ஓட்டிகள் 30 கிமீ வேகத்தில் பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.