ஆடுகளை குறிவைத்து திருடும் நபர்: காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி! - DINDIGUL CATTLE THEFT ISSUE
🎬 Watch Now: Feature Video


Published : April 14, 2025 at 12:41 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பேரூராட்சி அம்மையநாயக்கனூர். இங்கு பெரும்பாலான மக்கள் ஆடு மற்றும் மாடு மேய்ச்சலை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஊரில் சில நாட்களாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாகப் புகார் எழுந்து வந்தது.
இதனால், அந்த பகுதியில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் பாதுகாக்க வேண்டி பல்வேறு நடவடிக்கை எடுத்த நிலையிலும் தொடர்ந்து ஆடுகள் காணாமல் போகியுள்ளது. இதனால், விவசாயி ஒருவர் தனது ஆட்டுக் கொட்டைக்கு அருகே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து, அறியாத திருடர். அவரது திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அரங்கேற்றிய நிலையில் சிசிடிவி காட்சிப் பதிவாகி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகக் காட்டிக் கொடுத்துள்ளது. அதன்படி, அழகம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் கார்த்திக் வெள்ளாடுகளை முகமூடி அணிந்து கொண்டு தோளில் சுமந்து செல்லும் காட்சியும், கயிற்றைப் பிடித்து ஆடுகளை இழுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சம்பங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.