காவல்நிலையத்தில் திருநங்கைகளை பூஜை செய்யவைத்த ஆய்வாளர் - கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - TRANSGENDER POOJA AT POLICE STATION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 21, 2025 at 5:30 PM IST

1 Min Read

சேலம்: காவல் நிலையத்தில் திருநங்கைகளை வைத்து பூஜை செய்த பெண் காவல் ஆய்வாளரின் செயல் குறித்து விசாரணை நடத்த சேலம் காவல் ஆணையாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சேலம் மாநகரில் உள்ள அழகாபுரம் காவல் நிலையத்தில் புதிதாக காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றிருக்கிறார் தவமணி. இவர் அங்கு பணியில் சேர்ந்ததிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு திருநங்கைகளை கட்டாயப்படுத்தி அழகாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சிறப்பு பூஜை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு திருநங்கைகளை அழைத்துவந்து காவல் நிலையத்திற்குள் அவர்களை பூஜை செய்ய வைத்திருக்கிறார். இந்த காட்சிகள் தற்போது வெளியான வைரலாகின. இந்நிலையில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் கவனத்திற்கு இந்த தகவல் சென்ற நிலையில், பூஜை எதற்காக நடத்தப்பட்டது? அதில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? என்ற விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். 

கமிஷ்னரின் உத்தரவின்பேரில் தற்போது விசாரணை தொடங்கியுள்ள நிலையில், பூஜைக்கான விவரம் தெரிந்தபின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் காவல் ஆய்வாளர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து அழகாபுரம் காவல் நிலையத்திற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்தில் திருநங்கைகளை வைத்து பூஜை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.