“ஆமா, அந்த பக்கம் தான் போகனும்...” - சுற்றுலா பயணிக்கு வழிகாட்டிய புள்ளிமான்! - POLLACHI FOREST DEER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 2:19 PM IST

1 Min Read

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. அந்த பகுதியில் புள்ளிமான், யானை போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் ஓடி மறைந்து விடுவது வழக்கம். குறிப்பாகப் புள்ளிமான்கள் மிக பயந்த சுபாவம் கொண்டவை. அதனால், வனத்துறையினர் புள்ளிமான் அருகில் செல்லக் கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது எனச் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்துள்ளனர்.

மேலும், இந்த வனப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளதால் வனத்துறையினர் மான்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப் வழியாக பரம்பிக்குளம் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் தனது காரில் அமர்ந்தபடி வனப்பகுதியிலிருந்த புள்ளி மானிடம் மலையாளத்தில் பரம்பிக்குளம் எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்ட பொழுது புள்ளிமான் பரம்பிக்குளம் இருக்கும் இடத்தை நோக்கித் தலையாட்டியது போன்ற பதிவு இந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.