ETV Bharat / technology

ஜியோ AirFiber ரீசார்ஜ் இலவசம்: தீபாவளி சலுகையை வெளியிட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல்! - Jio AirFiber Diwali Offer

Free Jio AirFiber: தீபாவளி சலுகையை அறிவித்துள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல், அதன் வாயிலாக வாங்கும் பொருள்களுக்கு இணையாக ஒரு வருட ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சந்தாவை இலவசமாக வழங்குகிறது. புதிதாக இன்டர்நெட் இணைப்பு தேவைப்படும் நபர்களுக்கு இந்த ஜியோ ஆஃபர் சிறப்பானதாக இருக்கும்.

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 19, 2024, 3:47 PM IST

Jio airfiber offer banner
ஜியோ ஏர்-ஃபைபர் ஆஃபர் (Credits: JIO)

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஃபைபர் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை இந்தியாவில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. அதிக பயனர்களை கொண்டிருக்கும் இந்த சேவை கிடைக்காத இடங்களில், ஜியோ ஏர் ஃபைபர் (Jio AirFiber) சேவையை ரிலையன்ஸ் வழங்குகிறது. தற்போது, இதனை இலவசமாகப் பெற வாய்ப்பு வந்துள்ளது.

அதாவது, ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளம் அல்லது கடைகளில் ரூ.20,000-க்கும் மேல் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட ஜியோ ஏர் ஃபைபர் 2 இலவசமாக (One year free Jio AirFiber recharge) வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 18, 2024 முதல் நவம்பர் 3, 2024 வரை இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ ஃபைபர் ரீசார்ஜ் சலுகைகளைப் பெறுவது எப்படி?

புதிய ஏர்ஃபைபர் அல்லது ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையைப் பெற இரண்டு வழிகள் உள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) இணையதளம் அல்லது கடைகளில் ஷாப்பிங் செய்யலாம். இதற்காக இன்னொரு வழியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2,222 விலையில் மூன்று மாத தீபாவளித் திட்டத்துடன் புதிய ஏர்ஃபைபர் இணைப்பை பயனர்கள் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க:

செயலிழந்த ஜிமெயில் அக்கவுண்ட்: செப்.20 தான் கடைசி நாள்... உடனடியா இத பண்ணா; உங்க கூகுள் கணக்க காப்பாத்தலாம்! - Stop Google Account from Deleting

இதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள், நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான அவர்களின் செயலில் உள்ள ஜியோ ஏர்ஃபைபர் திட்ட மதிப்புடன் 12 மாதாந்திர கூப்பன்களைப் பெறுவார்கள்.

ஒவ்வொரு கூப்பனையும் 30 நாட்களுக்குள் அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) அல்லது மை ஜியோ ஸ்டோர் (MyJio Store) அல்லது ஜியோபாயிண்ட் ஸ்டோர் (JioPoint Store) அல்லது ஜியோமார்ட் (JioMart) ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்களில் ரீடிம் (Redeem) செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் மேற்கூறப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கடைகளில் இருந்து ரூ.15,000-க்கு மேல் வாங்கும் மின்னணு உபகரணங்களுக்கு இணையாக ஒவ்வொரு கூப்பனும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒப்பீட்டளவில் ஏர்டெல் ஃபைபர் (Airtel Fiber) திட்டங்களை விட ஜியோ ஃபைபர் திட்டங்கள் சிறப்பானதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம், ஜியோ திட்டங்களின் விலையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நேரலை டிவி சேனல்கள், இலவச ஓடிடி சந்தா (Free OTT Subscription) போன்ற பிரீமியம் சேவைகளும் தான் என்பது மறுக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க:

கடுப்பான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள்: சலுகையில் மோட்டோ ஜி85 போன்... ஆர்டர்களை ரத்துசெய்த நிறுவனம்! - Flipkart Scam

ஜியோ ஏர்-ஃபைபர் என்றால் என்ன?

customers enjoying Jio entertainment platforms via jio airfiber
ஜியோ ஏர்-ஃபைபர் ஆனது 800-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள், 15-க்கும் மேற்பட்ட ஓடிடி திட்டங்கள், 1 Gbps வேகமுள்ள வைஃபை கொண்டது ஜியோ ஏர்-ஃபைபர் (Credits: JIO)

ஜியோ ஏர்-ஃபைபர் ஆனது 800-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள், 15-க்கும் மேற்பட்ட ஓடிடி திட்டங்கள், 1 Gbps வேகமுள்ள வைஃபை கொண்ட ஆல் இன் ஒன் திட்டமாகும். JioAirFiber வாயிலாக நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோ சினிமா (JioCinema), சோனி லிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), சன் நெக்ஸ்ட் (SunNxt), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற 17 பிரபலமான ஓடிடி பயன்பாடுகளின் அணுகலைப் பெறலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.