ETV Bharat / technology

புதிய வரவால் விலை மலிவான ஐபோன் 15 - இனி இந்த ஆஃபர் கிடைக்குமா! - HOW TO BUY IPHONE 15 CHEAPER

மொபைல் பயனர்கள் பலரது கண்ணும் ஐபோன் 16 பக்கத்தில் இருக்கும்போது, மறுபுறம் ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்கிறது. புதிய மாடல் ஐபோனை வாங்க முடியாத நபர்களுக்கு, இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கிறது.

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 10, 2024, 1:33 PM IST

Updated : Sep 10, 2024, 5:33 PM IST

ஆப்பிள் ஐபோன் 15
ஆப்பிள் ஐபோன் 15 (Credits: Apple)

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி டெக் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இந்த சூழலில் பல பயனர்களும் முந்தைய ஐபோன் 15 மாடல் விலை குறித்தான தேடலில் இருக்கின்றனர். புதிய மாடல் போன் அதிக விலை இருக்கும் என்பதால், ஐபோன் 12, 13 மாடல் பயன்படுத்தும் நபர்கள் டைப்-சி உடன் வரும் ஐபோன் 15 மாடலுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள தயாராகின்றனர். அவர்கள் தேடலை நிவர்த்தி செய்யும் வகையில் பிளிப்கார்ட் தளம், ஐபோன் 15 (iPhone 15) மாடலுக்கான விலையைக் குறைத்து, வங்கி சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications):

முந்தைய மாடல் ஆப்பிள் ஐபோன் 15 ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஐஓஎஸ் 17 (iOS 17) இயங்குதளம் இயக்குகிறது. இதில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே டைனமிக் ஐலாண்ட் (Dynamic Island) உடன் இருக்கிறது. கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் OIS வசதியுடன் கூடிய 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 15 நிற வகைகள்
ஐபோன் 15 நிற வகைகள் (Credits: Apple)

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா டிஸ்ப்ளே டைனமிக் ஐலேண்டில் நிறுவப்பட்டுள்ளது. முக்கியமாக முதல்முதலாக ஐபோன் 15 மாடலில் தான் டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொண்டுவரப்பட்டது. இதன் வாயிலாக போனை 20W திறனுடன் சார்ஜ் செய்ய முடியும். மேலும், பல வேலைகளை எளிதாக்கும் ஆக்‌ஷன் பட்டன் இதில் உள்ளது. பல செயலிகளை இந்த பட்டன் வாயிலாக ஒரே கிளிக்கில் பயன்படுத்தலாம். கறுப்பு, நீலம், பச்சை, மஞ்சள், பிங்க் என மொத்தம் ஐந்து வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம்.

ஐபோன் 15
ஐபோன் 15 (Credits: Apple)

ஐபோன் 15 சலுகை விலை (iPhone 15 Price in India):

கடந்தாண்டு ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் அடிப்படை மாடல் விலை ரூ.79,600 ஆக இருந்தது. தற்போது பயனர்கள் இதன் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையை சுமார் ரூ.13,000 தள்ளுபடி விலையில் பெறமுடியும். ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை பதிவுசெய்து இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஐபோன் 16 வெளியீட்டிற்கு பின் பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 விலை ரூ.69,999ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.3,500 கேஷ்பேக் பெற முடியும். அதன்படி ரூ.66,499 என்ற விலையில் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து கூடுதல் சலுகை விலையைப் பெறலாம். புதிய மாடல் ஐபோன் 16 விலை இதை விட சுமார் ரூ.13,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆப்பிள் ஐபோன் 16 வாங்கலாமா?

Last Updated : Sep 10, 2024, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.