ETV Bharat / technology

பூமி கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது SSLV D3 ராக்கெட்! - SSLV D3 Rocket Launch

author img

By PTI

Published : Aug 14, 2024, 6:45 PM IST

SSLV D3 Rocket Launch on August 16th: பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் இன்று காலை இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது.

SSLV-D3 Rocket And EOS 08 Satellite
SSLV-D3 Rocket And EOS 08 Satellite (Credits - ISRO)

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியைக் கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

EOS 08 Satellite
EOS 08 Satellite (Credits - ISRO)

இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆக.16) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் எஸ்.ஐ.சி யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) ஆகிய ஆய்வுக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியைக் கண்கானித்து மிட்-வேவ் ஐஆர் (MIR) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (LWIR) பேண்டுகளில் புகைப்படங்கள் எடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, எரிமலை செயல்பாட்டைக் கண்காணித்தல், தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர்களைக் கண்காணித்தல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நிலையில், இன்று (ஆக.16) காலை இந்த எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள சூழலில், இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும், தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மற்றும் இ.ஒ.எஸ்-08 செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இ.ஒ.எஸ்-08 செயற்கைக்கோளை எடுத்துச் செல்லும் எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக இறுதிகட்டப்பணியான கவுண்டவுன் நேற்று (ஆக.15) தொடங்கியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: Google Pixel 9 Series மொபைலில் இவ்வளவு சிறப்பம்சங்களா? விலை என்ன? முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.