ETV Bharat / technology

டிரம்ப்-எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்: அமெரிக்க விண்வெளி திட்டங்கள் நிலை என்னவாகும்? - DONALD TRUMP VS ELON MUSK

ஸ்பேஸ்-எக்ஸ் உடனான திட்டங்களில் வெற்றியும், போயிங் ஸ்டார்லைனர் உடனான திட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பும் ராக்கெட் திட்டம்
விண்வெளிக்கு நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பும் ராக்கெட் திட்டம் (SpaceX)
author img

By ETV Bharat Tech Team

Published : June 7, 2025 at 1:58 PM IST

2 Min Read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையே வெடித்துள்ள மோதல், எதிர்கால அமெரிக்க விண்வெளி திட்டங்களின் நிலை தொடர்பான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதிவியேற்ற டிரம்ப், அரசாங்க செயல்திறன் துறை என்று அறியப்படும் ஒரு தற்காலிக அமைப்பை நிறுவி, அதன் தலைமை பொறுப்பாளராக எலான் மஸ்கை நியமித்தார். மேலும், பல அரசு திட்டங்களில் மஸ்க் நிறுவனங்களை இணைத்து செயல்பட்டார்.

இதன் விளைவாக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா-வுடன், ஸ்பேஸ்-எக்ஸ் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. சமீபத்தில், சுனிதா வில்லியம்ஸ் உள்பட விண்வெளி நிலையத்தில் சிக்கியிருந்த நாசா வீரர்கள், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் மூலம் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த சூழலில், தற்போது டிரம்ப் - எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. மஸ்க் நிறுவனத்திற்கு அரசு வழங்கி வந்த சலுகைகளையும், மானியங்களையும் நிறுவத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘அப்படி ஒன்று நடந்தால், நாசா பயன்படுத்தும் ஸ்பேஸ் எக்ஸ்-இன் டிராகன் விண்கலன் திரும்ப பெறப்படும்’ என எச்சரித்தார்.

எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
எலான் மஸ்க் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (ETV Bharat Tamil Nadu)

இந்த மோதல்கள் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க சந்தையில் எலான் மஸ்க் நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன. டிராகன் விண்கலத்திற்காக, 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் நாசா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், ‘ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கான அரசு நிறைய பணம் செலவிடுகிறது’ என டிரம்ப் கூறிவருகிறார்.

மற்றொரு பக்கம், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்-லைனர் விண்கலத்தை நாசா பயன்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இங்கு தான் பிரச்சினையே எழுகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடர்பான கவலைகள் இங்கிருந்து தான் தொடங்குகிறது.

இதையும் படிங்க
  1. பெரிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் காலம் நெருங்குகிறது!
  2. டிரம்ப் வரிக்கு தடை - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
  3. ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கலாம் - டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீட்டித்த நீதிமன்றம்!

இதற்கு முக்கிய காரணம், ஸ்பேஸ்-எக்ஸ் உடனான திட்டங்களில் வெற்றியும், போயிங் ஸ்டார்லைனர் உடனான திட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு கடந்த முறை சுனிதா வில்லியம்ஸ் உடனான விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டு வர, ஸ்டார்-லைனர் விண்கலம் மூலமாக நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது முக்கிய காரணமாக இருந்துவருகிறது.

மேலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), எலான் மஸ்கின் ஸ்டார்-லிங் நிறுவனத்துடன் இணைய சேவைக்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொருத்து தான், நாசாவின் எதிர்கால விண்வெளி திட்டங்கள் அமையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.