சென்னை: கோடைக் காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஏசியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-Structural Engineering Research Centre), இபிஎஸ் (Expanded Polystyrene) முறையில் கட்டிடத்தை உருவாக்கியுள்ளது. இதனை சிஎஸ்ஐஆர் இயக்குநர் கலைச்செல்வி திறந்து வைத்தார்.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீடுகளில் ஏசியை பயன்படுத்துகின்றனர். தற்போது இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-Structural Engineering Research Centre) புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலநிலையை தாங்கும் கட்டிடம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும், அதிக வெப்பத்திறனை தாங்கும் விதத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Inauguration of Sustainable Precast SECROBuilT House by Dr. (Mrs.) N. Kalaiselvi, Director General, CSIR & Secretary DSIR at @csir_serc @CSIR_IND pic.twitter.com/oXCL6znR3t
— CSIR-SERC (@csir_serc) April 12, 2025
கூரை வேலைக்காக, சிஎஸ்ஐஆர் - எச்இஆர்சி-யில் உருவாக்கப்பட்ட இலகுரக கூரை (precast lightweight roof ) (SECROBuilT) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு காலநிலை மீள்தன்மை மற்றும் நிலஅதிர்வு பின்னடைவின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றது. இந்த கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு பிரீகாஸ்ட் இபிஎஸ் பிளாக்குகள் (Pre-casted EPS construction blocks) எனப்படும் குறைந்த எடை பேனல்கள் அல்லது பிளாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ப்ரீகாஸ்ட் கான்கிரீட் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் (Expanded Polystyrene - EPS) மையமாக கொண்டு செய்யப்பட்டுள்ளது.
இருபுறமும் சிமெண்ட் கல் பயன்படுத்தி, நடுவில் ‘தொர்மாகோல் நிறுவப்பட்டுள்ளது. மேலும், கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் இரும்பு கம்பிகள் உள்பக்கமாக பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் செங்கல், ஹாலோ பிளாக் போன்ற கட்டுமான பொருள்களை ஒப்பிடும்போது, இதன் எடை மிகவும் குறைவாக இருக்கும். தேங்கிய நீரில் மிதக்கும் தன்மையில் தான் இந்த கான்கிரீட் ப்ரீகாஸ்ட் இபிஎஸ் பிளாக்குகள் இருக்கும்.
இஐஎம்பி தொழில்நுட்பம், கால்சியம் கார்பைடு கசடு (கால்சியம் கார்பைடு (CaC2) என்ற இரசாயனத்தை நீருடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது உருவாகும் ஒரு கழிவுப் பொருள் மற்றும் பறக்கும் சாம்பல் போன்ற தொழில்துறை கழிவுகளின் தொகுதிகளைப் பயன்படுத்துகிறது. EIMB பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டமைப்பு சுவர்கள், புதிய வடிவியல் உள்ளமைவுகள் மற்றும் புதிய பிணைப்பு முறையின் மூலம் வடிவமைக்கப்படுகிறது.
இவை நிலஅதிர்வு மீள்தன்மையை (Seismic resilience) மேம்படுத்துகின்றன. இது இலகுரக மற்றும் குறைக்கப்பட்ட வெப்ப கடத்துத்திறனுக்கு பயன்படுத்தப்படுகிறது. "டி" வடிவில் கட்டப்பட்ட கட்டமைப்பு சுவர்கள் (D walls) குறைந்த நிலஅதிர்வு நிறை காரணமாக. நிலஅதிர்வு மீள்தன்மையை மேம்படுத்துகின்றன. முழு கட்டிடமும் வெப்ப கண்காணிப்பு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.
இஐஎம்பி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட அறைகளில் வெப்பநிலை, சுமார் 6 டிகிரி செல்சியஸ். இரண்டு வெவ்வேறு தொழில்நுட்பங்களில், ஒன்று இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கார்பன் தடத்தைக் குறைப்பதன் மூலம் காலநிலை மீள்தன்மையை நிவர்த்தி செய்கிறது. மற்றொன்று கட்டிடத்தின் உள்ளே வெப்ப மீள்தன்மையை மேம்படுத்துகிறது என்று சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்