ETV Bharat / technology

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பார்க்க முடியும்? இன்னும் ஒரு வாய்ப்பு கூட இருக்கு! - How to spot comet A3

Comet Spotted in Sky: கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் காமெட்டை வெறும் கண்களால் பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.

author img

By ETV Bharat Tech Team

Published : Oct 1, 2024, 1:37 PM IST

comet spotted in the sky news thumbnail
வால் நட்சத்திரம் (கோப்புப் படம்) (ETV Bharat / Meta)

பல அற்புதங்கள் புவியில் பெருகிக் கிடக்கிறது என்றால், இதற்கு வெளியேயும் அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. அப்படி மக்களால் அதிசயித்து பார்க்கப்பட்ட ஒன்று தான் காமெட் (Comet). வானில் தெரிந்து இதை மக்கள் பிரம்மிப்புடன் வெறும் கண்களால் பார்த்து மகிழ்ந்தனர்.

காமெட் என்பது வால் நட்சத்திரம் என்று தமிழில் அறியப்படுகிறது. இது சூரியனைச் சுற்றி வரும் தூசி, பனி மற்றும் பாறை ஆகியவற்றால் ஆன ஒரு வான் அமைப்பு ஆகும். இதை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய பகுதியில் கண்ட மக்கள், புகைப்படங்களை எடுத்து தங்களின் எக்ஸ் (X, formely Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

வியப்பில் மக்கள்:

ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், 80 ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான் இந்த நிகழ்வைக் காண முடியுமாம்! இன்னும் சில நாள்களுக்கு வெறும் கண்களால் இதைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காமெட் சி/2023 ஏ3, வால் நட்சத்திரன் சுச்சின்ஷான்-அட்லாஸ் (Comet C/2023 A3, also known as Comet Tsuchinshan- ATLAS) என்று பெயரிடப்பட்டுள்ளது.

bengaluru sky view
பெங்களூருவில் பல வண்ணங்களில் காட்சியளித்த வானம். (X / @Vihar73)

இதை முதன்முதலில் சீனாவில் உள்ள சுச்சின்ஷான் ஆய்வகம் மற்றும் அட்லாஸ் சர்வே, செப்டம்பர் 27 அன்று சூரியனுக்கு மிக அருகில் பூமியை நோக்கி வந்துபோது கண்டுபிடித்தது. இது பூமியில் இருந்து 129.6 கிலோமிட்டர்கள் தொலைவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

comet view in bengaluru
பெங்களூருவில் படம்பிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் (X / @Utkarsh_Shahdeo)

இனி எப்போது பார்க்கலாம்?

அக்டோபர் 2 வரை இதை வானில் காணலாம். மீண்டும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 26 வரை வால் நட்சத்திரங்கள் பூமியை நெருங்கும்போது பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு முன்னரே இதை பார்ப்பது சிறந்ததாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, காலை 4:40 முதல் 5:30 வானில் இது தென்பட்டால் தெளிவாகத் தெரியும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது.

இதையும் படிங்க

  1. இனி பயமில்லாமல் தூங்கலாம்: 'மிஷன் மெளசம்' திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!
  2. சந்திரயான் திட்டம்: நிலவில் 160 அடி அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிப்பு!
  3. விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?

"வால் நட்சத்திரங்களை காண்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, வானில் தெளிவான பார்வையை வழங்கும் திறந்த வெளிக்குச் சென்று (மொட்டை மாடி) கிழக்கு வான் பகுதியில் பார்க்க வேண்டும். நகரத்தின் விளக்குகள் ஜொலிப்பது உங்கள் கண்களுக்குள் அகப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்." என்று பின்னெல்லி கூறினார்.

இந்தியாவில் காமெட்டைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் தான் வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி, என்பது குறிப்பிடத்தக்கது.

etv bharat tamil nadu whatsapp channel link
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.