ஹைதராபாத்: ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் தங்கள் தயாரிப்புகளின் மேம்படுத்தல்கள் குறித்த தகவல்களை பகிரும் தளமாகவும், புதிய தயாரிப்புகள் தொடர்பான திட்டங்களை வெளியிடவும் ‘ஆப்பிள் டெவலப்பர் மாநாடு’-ஐ (Apple Developer Conference) நடத்திவருகிறது. 2025-இன் மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய தயாரிப்புகள் என்ன, எங்கு? எப்படி? இந்த நிகழ்வை நேரலையில் காணலாம், புதிய கேட்ஜெட்டுகள் ஏதும் அறிமுகம் செய்யப்படுகிறதா என்பது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.
ஆப்பிள் டெவலப்பர் மாநாடு 2025 நேரலை
இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு ‘ஆப்பிள் டெவலப்பர் மாநாடு 2025’ நேரலை தொடங்குகிறது. ஜூன் 13-ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. கலிஃபோனியாவின் குப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்வில், முக்கிய உரையாடல்கள், வீடியோ உரையாடல்கள், வழிகாட்டிகள், குழு ஆய்வுகள், அறிவிப்புகள் போன்றவை இடம்பெறுகிறது.
இதனை ஆப்பிள் டெவலப்பர்ஸ் செயலி, ஆப்பிள் டிவி செயலி, ஆப்பிளின் பிரத்யேக இணையதளம், யூடியூப் சேனல் போன்றவற்றில் பயனர்கள் நேரலையை இன்றிரவு 10:30 மணிமுதல் காணலாம்.
ஆப்பிள் டெவலப்பர் மாநாடு 2025 எதிர்பார்ப்புகள்
ஆப்பிள் டெவலப்பர் மாநாடு 2025-இல் முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுவது இயங்குதள புதுப்பிப்பு தான். முக்கியமாக தற்போது இருக்கும் ஐஓஎஸ் 18-இன் மேம்பட்ட பதிப்பு ஐஓஎஸ் 19 என்று பயனர்கள் நினைத்திருப்பர். ஆனால், ஐஓஎஸ் 26 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் இயங்குதள பதிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ஐபேட் ஓஎஸ் 26, மேக் ஓஎஸ் 26, டிவி ஓஎஸ் 26 என இயங்குதள பட்டியல்கள் 26 வெர்ஷன் குறியீட்டை பெறும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
#WWDC25 is next week! Can’t wait to show you what we’ve been working on.
— Greg Joswiak (@gregjoz) June 2, 2025
See you June 9 at 10am PT. pic.twitter.com/qhrzevDbMH
இதையும் படிங்க |
மேலும், ஆப்பிள் தங்களின் அனைத்து கேட்ஜெட்டுகளுடன் இணங்கும் ஒரு யூசர் இன்டர்ஃபேசையும் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் வடிவமைப்பின் பெயர் சொலாரியம் யுஐ ‘Solarium UI’ என்று கூறப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது இதன் பெயரில் ஆப்பிள் மாற்றம் கொண்டுவரும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், வளர்ந்துவரும் கூகுளின் ஜெமினை, மைக்ரோசாப்டின் கோ-பைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டுகளுடன் போட்டியிடும் வகையில், ஓபன் ஏஐ-யின் சாட்-ஜிபிடி உடன் ஆப்பிள் தங்களின் ‘சிரியை’ (Siri) இணைத்து வலிமையாகக் கட்டமைத்து வெளியிட உள்ளதாகவும் டெக் வல்லுநர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.