ETV Bharat / state

உயிரைப் பறித்த ஊக்க மருந்து? இளைஞருக்கு நேர்ந்த துயரம்! - INJECTIONS FOR BODYBUILDING

சென்னை காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக போட்ட ஊசி உயிரைப் பறித்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 7:56 PM IST

1 Min Read

சென்னை: காசிமேட்டில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊக்க மருந்து ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னை காசிமேடு ஜீவரத்னம் நகரைச் சேர்ந்தவர் ராம்கி. இவருக்கு வயது 35. இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஜிம்மில், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். இளைஞர் ராம்கி கடந்த 6 மாதங்களாக அந்த ஜிம்மிற்கு சென்று வந்தார். மேலும், உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஊக்க மருந்தை ஊசியாக தொடர்ந்து செலுத்திக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ராம்கிக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடும் வயிற்று வலியால் துடித்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மருத்துவர்கள் ராம்கியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த  ராம்கி
உயிரிழந்த ராம்கி (ETV Bharat Tamil Nadu)

ஆனால், சிகிச்சை பலனின்றி இளைஞர் ராம்கி இன்று உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மருத்தமனையில் இருந்து இளைஞர் ராம்கியின் உடலை பெறப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய 'ஹெல்மெட்' திருடர்கள்: அச்சத்தில் செங்கல்பட்டு மக்கள்!

மருத்துவர்களின் பரிந்துரையின்றி, ஊக்க மருந்து ஊசி இளைஞர் ராம்கிக்கு எப்படி கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய உறவினர்கள், ஜிம் பயிற்சியாளர், ஊக்க மருந்து சப்ளை செய்தவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ராம்கியின் உடலை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சென்னை காசிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஊக்க மருந்து ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.