தேனி: இரண்டு மாதங்களாக தவணை தொகை செலுத்த கால தாமதமானதால் கடன் பெற்ற பெண்ணை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து வீட்டின் சுவரில் 'அடமானம் பெற்ற சொத்து' என்று எழுதி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான வீட்டை பழனிசெட்டிப்பட்டியில் உள்ள 'கிரிஹம்' தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, ஆறு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அடமான கடனுக்கான வட்டியை முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகையை செலுத்த முடியாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவணை தொகையை வசூலிக்க கிரிஹம் நிதி நிறுவன ஊழியர்கள் மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டியும் கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டின் சுவற்றில் வீட்டினை அடமானம் வைத்து கடன் பெற்றதால் "கிரஹம் நிதி நிறுவனத்தின் சொத்து" என, எழுதியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி இது குறித்து கானா விலக்கு காவல் நிலையத்தில் வங்கி ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இரண்டு மாதங்களாக தவணை தொகை செலுத்த கால தாமதமானதால் தன்னை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து தனது வீட்டின் சுவற்றில் நிதி நிறுவனத்தின் சொத்து என, எழுதி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு 10,000-ஐ இழந்த ஓட்டுநர்.. அப்படி என்ன தான் நடந்துச்சு?
அண்மையில் வலுக்கட்டாயமாக மிரட்டி கடன் தொகையை வசூல் செய்தால் நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியது. ஆனாலும் நிதி நிறுவனங்கள் அதை கடைப்பிடிக்காமல் தொடர்ந்து அவர்கள் போக்கிலேயே வசூலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இரண்டு மாதங்களாக தவணை தொகை செலுத்த கால தாமதமானதால் கடன் பெற்றவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டின் சுவற்றில் ''அடமானம் பெற்ற சொத்து'' என்று எழுதி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.