ETV Bharat / state

கோவையில் அதிகரித்த காட்டு யானைகளின் நடமாட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தல்! - WILD ELEPHANTS VIRAL VIDEO

வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வேலியை தாண்டிச் செல்லும் காட்டு யானை
மின்வேலியை தாண்டிச் செல்லும் காட்டு யானை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 11, 2025 at 1:14 PM IST

2 Min Read

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை கடந்து செல்லும் காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி அருகேயுள்ள முள்ளங்காடு பகுதியில் குட்டியுடன் இரண்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறின. பின்னர் மீண்டும் நேற்று காலை வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன.

அப்போது முள்ளங்காடு பகுதியில் காட்டு யானைகள் வந்த போது, அப்பகுதியில் இருந்த மின்வேலி யானைகளை வழி மறித்தது. இதனால் சிறிது நேரம் காட்டு யானைகள் தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தன. பின்னர் சமயோசிதமாக ஒரு பெண் யானை மின்வேலியின் கம்பிக்கு அடியில் புகுந்து வெளியேற, உடன் வந்த குட்டி யானையும் அதே போல் வெளியேறியது. மற்றொரு யானையால் அந்த வழியாக வெளியேற முடியாததால், மின் வேலியின் கம்பியை தாண்டியபடி வெளியேறியது. இவை அனைத்தையும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதே போல நேற்று மாலை உணவு தேடி சாடிவயல் பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை சென்றது. சாடிவயல் செக்போஸ்ட் பகுதிக்கு சென்ற அந்த யானை, அங்கிருந்தவர்களை துரத்தியது. இதனால் அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடி தப்பித்தனர். அந்த யானை அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வாகனத்தை தும்பிக்கையால் அழுத்தி தள்ளப் பார்த்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட வனத் துறையினர் அதனுடன் போராடி அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சமீப காலமாக சாடிவயல், தொண்டாமுத்தூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், யானைகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக அவர்களாக யானைகளை விரட்ட முற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.