சென்னை: தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டது திருக்குறளில் இருந்துதான். ஆனால் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடும் மாநிலம் அதனை ஏற்க மறுக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று வைகாசி விசாகம். இன்று முருகனுக்கான நாள். அவருடைய ஆசிர்வாதத்துடன் சிறுவாபுரி பாலமுருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தேன். பிரதமர் மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர். அவர்தான் ஐ.நா.விற்கு திருக்குறளை எடுத்துச் சென்றார். உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றார். சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையம் திறந்து வைத்தார். மலேசியா மற்றும் ஹூஸ்டன் பிரான்சில் திருவள்ளுவர் பெயரில் இருக்கைகள் அமைத்தார். மோடி எடுக்கும் கொள்கை முடிவுகள் அனைத்தும் திருக்குறளை கருத்தைக் கொண்டு எடுக்கப்படுகிறது.
சுயசார்பு இந்தியா, சுயசார்பு தேசப்பாதுகாப்பு, சுயசார்பு பொருளாதாரம் ஆகியவற்றை திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். சுதந்திரத்திற்கு முன்பாக பிரிட்டிஷ் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கைதான் நான் பின்பற்றினோம். இதனால் பிஹெச்டி முடித்துக்கொண்டு வேலை தேடி அலையக்கூடிய நிலை காணப்பட்டது. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு! திமுக, அதிமுக, மநீம வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்!
தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டது திருக்குறளில் இருந்துதான். ஆனால் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடும் மாநிலம் அதனை ஏற்க மறுக்கிறது. பிரதமரின் ஒவ்வொரு பாலிசிக்கும், வழிகாட்டியாகவும் இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது திருக்குறள் மட்டுமே. திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்குள் சுருக்கி விட முடியாது. திருக்குறள் கொடுத்த அருமையான அந்த அறிவுரையை தான் சனாதான தர்மமும் சொல்கிறது. நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது முதல் மூன்று மாதங்களில் 30க்கும் மேற்பட்ட திருக்குறள் புத்தகங்களை எனக்கு பலரும் பரிசளித்தனர். நான் பல புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்து பார்த்தேன் ஆனால் மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் என்பது இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் மிகப்பெரிய ஆழமான கருத்துக்களை கொண்டது.
நான் வந்து ஆறு மாதத்தில் கோயம்புத்தூரில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அங்கு பேசியபோது, பலரும் திருக்குறள் அறிஞர்களாக இருந்தனர். ஆனால் அதில் உயிரோட்டம் இல்லாமல் இருந்தது. திருக்குறளை தர்ம சாஸ்திரத்திடன் பார்க்க வேண்டும். இன்று நாம் பலரும் தர்ம சாஸ்திரத்துடன் ஒப்பிட்டு பார்த்து, ஆமாம் அப்படித்தான் இருக்கிறது என குறிப்பிடுகின்றனர், பெருமையாக இருக்கிறது. திருவள்ளுவரின் பிறந்தநாளை வேறொரு நாளில் கொண்டாடுவதை நம்பாதீர்கள். இன்று நாம் கொண்டாடுகிறோம், நமது தேசிய தலைவரும் இதை செய்கின்றார். நாம் செய்கின்றோம், நம் இந்த ஒளியை பல உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்