ETV Bharat / state

கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏன் அங்கீகரிக்கவில்லை? மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதிய விளக்கம்! - WHY DID NOT APPROVE KEEZHADI

சிஏஜி அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது. அது இறுதியான முடிவு அல்ல. காங்கிரஸ் ஆட்சியின் 2 ஜி போன்ற எந்த ஊழல்களும் பாஜக ஆட்சியில் கிடையாது என சென்னையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர் சந்திப்பு
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர் சந்திப்பு (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 10, 2025 at 3:49 PM IST

2 Min Read

சென்னை: தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அதே நேரத்தில் கீழடி தொடர்பாக இன்னும் கூடுதலாக அறிவியல் பூர்வமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் 11ஆம் ஆண்டு சாதனை புத்தகத்தை தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டு முன்னேறிய நாடாக இந்தியா திகழும் நோக்கோடு செயல்களை முன்னெடுத்து வருகிறோம். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அனைத்தும், பொதுமக்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டே இருக்கின்றன.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (ETV Bharat Tamil Nadu)

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளனர். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், மக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஆக்கப்பூர்வமாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசில், 30 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் சுயசார்பு திறன் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி எஞ்சின் தமிழ்நாடு... மேடையில் 'தக் லைப்' காட்டிய மு.க.ஸ்டாலின்!

ஊழல் குறித்தும், சிஏஜி அறிக்கை குறித்தும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். சிஏஜி அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது. அது இறுதியான முடிவு அல்ல. திட்டம் அறிவிக்கும் போதும் அதன் பின்னர் கூடிய மதிப்பீடும், செயல்படுத்தும் போது மாறுபடக்கூடிய மதிப்பீடுகள் காரணமாகவும் இது போன்ற வேறுபாடுகள் வந்திருக்கலாம். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும் போது திட்டத்திற்கான நிலம் எடுத்தல் பணி உள்ளிட்டவற்றால் ஏற்படும் கூடுதல் செலவினம் காரணமாகவும் தொகை மாறுபாடுகள் வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் 2 ஜி போன்ற எந்த ஊழல்களும் இந்த ஆட்சியில் கிடையாது.

தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் குறித்து பல வகையான ஆய்வுகள் கீழடியில் நடந்த போதும் கூட, இன்னும் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியிலான அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவைப்படுகின்றன. அப்படி அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியிலான அதிகமான மேலும் ஆய்வுகளும், முடிவுகளும் கிடைக்கும் போது, தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிப்பதற்கு எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.