ETV Bharat / state

“காசு, பணம், துட்டு, மணி..மணி..” பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! - TODAY RASIPALAN IN TAMIL

ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 21, 2025 at 6:55 AM IST

2 Min Read

மேஷம்: உங்கள் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்துவீர்கள். திட்டங்களை சிறப்பாக தீட்டி, பணியில் சிறந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி, அதன் மூலம் சிறந்த பலனைப் பெறுவீர்கள். ஆனால், உங்களுக்கான அங்கீகாரம் சரியான முறையில் கிடைக்காததால், ஏமாற்றம் ஏற்படக் கூடும். தோல்விகளை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாமல் இருப்பது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்: நீங்கள் விதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும், நல்லவை நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. மன வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

மிதுனம்: இன்று நீங்கள் எந்த வேலையை தொடங்கினாலும், அது எந்த வித தாமதமும் இன்றி வெற்றிகரமாக முடியும். இருப்பினும், எந்த விதமான வேலையை முடிக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும். உங்கள் வேலைக்கு உரிய வெகுமதி அல்லது பலன் விரைவில் கிடைக்கும்.

கடகம்: அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நிலம், வீடு அல்லது கட்டிடம் தொடர்பான வர்த்தகத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் இடமிருந்து, முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இன்று லாபகரமான நாளாக இருக்கும்.

சிம்மம்: எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்று முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எந்த அளவுக்கு நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்கு சவால்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி: இன்றைய நாள் முழுவதும் இனம் புரியாத பயம் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதிக நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் சூழ்நிலைகளில் இருந்து தெளிவு பிறக்கும். நீங்கள் இன்று சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்: புதிய துணிகள் வாங்க ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு, இன்று அவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை கூர்ந்து கவனித்து, கவனமாக பேசவும், செயல்படவும் வேண்டும். பகல் கனவு காண்பதிலேயே நீங்கள் நேரத்தை செலவிடுவதை உணரலாம்.

விருச்சிகம்: இன்று புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த முறையில் நடைபெறாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், நம்பிக்கையை கைவிட வேண்டாம். ஏமாற்றம் கொள்ள வேண்டாம். வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளியில் கற்ற பாடத்தை நினைவில் கொள்ளவும்.

தனுசு: வார்த்தைகளை விட, செயல்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணியை, செய்து முடிக்கும் வாய்ப்பு உள்ளது. நெடுநாட்களாக இருந்த சச்சரவுகளையும், வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மகரம்: உங்கள் நம்பிக்கை, நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். உங்கள் எதிர்மறையான செயல்பாடுகள், உங்கள் இலக்கை எட்ட உதவும். அக்கறை இல்லாதவர் போல் இருக்க மாட்டீர்கள். மிகவும் கவனத்தோடு நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதனைகளை படைக்கும்.

கும்பம்: கொண்டாட்டங்களுக்கு காரணம் தேடுவதற்கு இன்று அவசியமே இருக்காது. இன்று எந்த ஒரு செய்தி உங்களுக்கு வந்து சேர்ந்தாலும், நீங்கள் அதை கொண்டாடவே விரும்புவீர்கள். பாதையில் தடைகள் எதுவுமே இருக்காது. பணியிடத்தை பொறுத்தவரை, உங்கள் இலக்கை அடைவதற்கான வழியில் மேலும் முன்னேறிச் செல்வீர்கள்..

மீனம்: இன்று, உங்களது கிரக நிலைகளை பார்க்கும்போது, உங்களுக்கு நிதி ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால், நிதி தொடர்பான விஷயங்களை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.