ETV Bharat / state

12 ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல்: ''பதிவிறக்கம் செய்வது எப்படி?" - அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு! - TN GOVT EXAMINATIONS DEPARTMENT

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வெழுதும் மாணவர்கள்
தேர்வெழுதும் மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2025 at 5:01 PM IST

1 Min Read

சென்னை: தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை 4 ஆம் தேதி பதிவிறக்கம் செய்து, 5 ஆம் முதல் 7 ஆம் தேதி மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ''12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 4 ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification Click செய்து HSE Second Year Exam, March 2025 Scripts Download என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotaling Revaluation என்பதை Click செய்து வெற்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 5.6.2025 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் 7.6.2025 (சனிக்கிழமை) 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: NEET PG 2025: நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு; மீண்டும் எப்போது நடக்கும்?

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மனுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்த வேண்டும்." என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.