வேலூர்: வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக, நாளை வேலூர் வரும் முதலமைச்சர், கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியின் முழு விவரங்களை இங்கு காணலாம்.
ஜூன் 25, வேலூர் நிகழ்ச்சி விவரம்:
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை (ஜூன் 25) காலை 10.25 மணிக்கு, சாய்நகர் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் (SNSI) மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறார்.
- காட்பாடியில் சட்டமன்ற சார்பில் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் புதிய பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

- மதியம் 01:00 மணி: வேலூர் மாவட்டத்தில், 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
- பிற்பகல் 1:30: மணி: வேலூர் விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்து மதிய உணவு அருந்துகிறார். தொடர்ந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
- மாலை 5:00: விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்படும் முதலமைச்சர், 5:30 மணியளவில், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கருணாநிதி திருவுருவச் சிலையையும் திறந்து வைக்கிறார்.

- மாலை 6:00 மணி: அணைக்கட்டில் இருந்து சாலை வழியாக திருப்பத்தூர் செல்கிறார்.
- இரவு 8:00 மணி: திருப்பத்தூருக்கு வருகை தரும் முதலமைச்சர், 8.05 மணியளவில், திருப்பத்தூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் திறந்து வைக்கிறார்.
- இரவு 8:15 மணி: திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
ஜூன் 26, திருப்பத்தூர் நிகழ்ச்சி விவரம்:
- காலை 10.30 மணி: விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, 11:00 மணிக்கு அரசு நலத்திட்டங்களை வழங்குகிறார்.
- தொடர்ந்து, காலை 11:45 மணி: ஜோலார்பேட்டைக்கு புறப்படும் முதலமைச்சர், மதியம் 12 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை புரிகிறார்.
- பின்னர், 12.18 மணி: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்புகிறார்.
- மாலை 4:00 மணி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தருகிறார்.
வடக்கு மண்டல ஐஜி ஆய்வு:
இந்த நிலையில், முதலமைச்சரின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து வடக்கு மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். உயர் சிறப்பு மருத்துவமனை, காட்பாடி ரயில் நிலையத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் மற்றும் வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுள்ளது. தடையைமீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்