ETV Bharat / state

நெல்லையில் இன்றே கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை... சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு! - BAKRID FESTIVAL SPECIAL THOLUGAI

தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இன்றே கொண்டாடப்பட்டது.

சிறப்பு தொழுகை
சிறப்பு தொழுகை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 6, 2025 at 10:54 AM IST

1 Min Read

திருநெல்வேலி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் மற்றும் ஹிஸ்டரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆனால், சௌதி உள்ளிட்ட நாடுகளில் இன்றே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை பின்பற்றி கேரளாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இன்றே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் மற்றும் ஹிஸ்டரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை நிறைவு பெற்ற பின் ஒருவருக்கு ஒருவர் தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பக்ரீத் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி (ETV Bharat Tamil Nadu)

இறைத் தூதர்களில் ஒருவரான முகமது இப்ராஹிம் தனது மகனான இஸ்மாயிலை இறைவனுக்காகப் பலி கொடுக்க முன் வந்த தியாகத்தைப் போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகையானது தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி வழங்கப்படும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.

அதில் ஆடு, மாடு போன்றவற்றைப் பலியிட்டு அதை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை தனக்கும், மற்றொரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், இன்னொரு பங்கை ஏழை எளிய மக்களுக்கும் இஸ்லாமியர்கள் வழங்குவார்கள். மேலும், இறைச்சி வகைகளைப் பிரியாணி உள்ளிட்ட உணவு உணவாகச் சமைத்து அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் வழங்கி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடுவர்.

இதையும் படிங்க: மொழி விவகாரம்: அமித் ஷாவுக்கு ஒரு நியாயம், கமலுக்கு ஒரு நியாயமா? கொந்தளித்த பேராசிரியர் அருணன்!

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு வெளியூரில் உள்ள இஸ்லாமியர்கள் சொந்து ஊர்களுக்குத் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள், மாடுகள் விற்பனை செய்யும் சிறப்பு சந்தைகளில் விற்பனை அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடை விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.