சென்னை: திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, திருநெல்வேலிக்கும் - திருச்செந்தூருக்கும் இடையே இரண்டு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் ஜூன் 9, 2025 திங்கட்கிழமை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முதல் ரயில்: ஒரு ஏசி இரண்டு அடுக்கு ரயில் பெட்டி, 2 ஏசி மூன்று அடுக்கு ரயில் பெட்டிகள், 9 ஸ்லீப்பர் வகுப்பு ரயில் பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் கொண்ட ரயில் எண் 06101, ஜூன் 9, 2025 அன்று காலை 09.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 10.50 மணிக்கு திருச்செந்தூரை அடையும். மறுமார்க்கமாக, ரயில் எண் 06102, ஜூன் 9, 2025 அன்று காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 12.55 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
On Account of Vaikasi Visagam Festival at Sri Subramania Swamy Temple at Tirichendur, Two pairs of Unreserved Special Trains will be run between Tirunelveli and Tiruchendur on Monday, 9th June 2025.
— Southern Railway (@GMSRailway) June 7, 2025
Passengers , kindly take note and plan your #travel#SouthernRailway pic.twitter.com/aiMonGYOcY
இதையும் படிங்க: மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம்: உறுதி அளிக்க அமித் ஷா தயாரா? - தயாநிதி மாறன் கேள்வி! |
இரண்டாவது ரயில்: 10 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் கொண்ட ரயில் எண் 06103, ஜூன் 9, 2026 அன்று இரவு 9.00 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
மறுமார்க்கமாக, ரயில் எண் 06104, ஜூன் 9, 2025 அன்று இரவு 11.00 மணிக்கு திருநெல்வேலியைப் புறப்பட்டு, ஜூன் 10, 2025 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூரை அடையும். இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் மற்றும் ஆழ்வார் திருநகரி ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.