ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து மேலாளர் உயிரிழப்பு! - Fire accident in thoothukudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 6:37 PM IST

Computer Battery Burst to Fire Accident: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மேலாளர் ஸ்ரீதர் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து, உயிரிழந்த ஸ்ரீதர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து, உயிரிழந்த ஸ்ரீதர் (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அருகே புதுகுடியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (52) செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். மேலும், இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண்ணும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண்ணும், ஸ்ரீதரனின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது, ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்துள்ளது.

பேட்டரி வெடித்ததில் தீ மளமளவென பரவி வங்கி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. உடனே, அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தீ முழுமையாக பரவியுள்ளது. இதற்கிடையே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது புகை புகை மூட்டத்திற்குள் தீயில் சிக்கியபடி ஸ்ரீதர் கிடந்த ஸ்ரீதரை மீட்க முயன்றுள்ளனர்.

ஆனால், அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கரூர்: சார்ஜில் போட்ட செல்போனால் பற்றி எரிந்த செல்போன் கடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.