தேனி: மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் இமானுவேல் சேகரின் 100ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் தென்கரை இந்திராபுரி தெரு பகுதியைச் சேர்ந்த மக்கள் இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்றனர்.
அப்பொழுது சில இளைஞர்கள் திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் தென்கரை பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சுற்றி போடப்பட்டிருந்த கூண்டின் மீது ஏறி மது போதையில் அடாவடித்தனம் செய்தனர்.
இதையும் படிங்க: பார்த்து பார்த்து வரைந்த தவெக மாநாட்டின் விளம்பரங்கள் அழிப்பு! ஈரோடு நிர்வாகிகள் ஷாக்..!
இது குறித்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மகாத்மா காந்தி சிலை மீது ஏறி அடாவடி செய்த இந்திராபுரி தெரு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (23) என்ற இளைஞரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் மீது தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமரியாதை செய்தது மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்