ETV Bharat / state

பாஜக கூட்டணியா, அதிமுக கூட்டணியா? சென்னையில் அமித் ஷா ஏப்ரல் 11-ல் சொன்னது இது தான்! - WHAT DID AMIT SHAH SAY

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு (கோப்புக்காட்சி)
மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு (கோப்புக்காட்சி) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 11, 2025 at 5:41 PM IST

2 Min Read

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் பாஜக, அதிமுக கட்சிகள் உறுதியோடு இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் யார் தலைமையில் கூட்டணி என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பது போல தெரிகிறது.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அதிமுக தலைவர்கள் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், கூட்டணியில் ஏதும் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதால் கூட்டணி பற்றி வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கின்றனர்.

அமித் ஷா சென்னை வந்து சென்ற நான்கு நாட்கள் கழித்து ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.தம்பிதுரை, "2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்பதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததும் இல்லை. இனி மேலும் அது அமையப்போவதும் இல்லை,"என திட்டவட்டமாக கூறினார்.

பாஜக இணையதளத்தில் வெளியாகி உள்ள அமித்ஷாவின் சென்னை பேட்டி
பாஜக இணையதளத்தில் வெளியாகி உள்ள அமித்ஷாவின் சென்னை பேட்டி (ETV Bharat Tamil Nadu)

தம்பித்துரையின் கருத்தை அதிமுக தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. இது குறித்து பாஜக தலைவர்களும் ஏதும் விமர்சனம் செய்யவில்லை. இதே போல சிவகாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஜூன் 10) நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி என்று எங்கே சொன்னார்கள்?‌ யார் சொன்னது? தமிழ்நாட்டில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணி ஆட்சி வரும். இபிஎஸ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தான் அமையும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி... கூட்டணிக்கு வரும் 'பெரிய' கட்சி! மகிழ்ச்சி பொங்க பேசிய நயினார்!

இப்படி அதிமுக தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கட்சி தலைமையில் தான் கூட்டணி என்றும், ஒரு சில தலைவர்கள் தனித்து ஆட்சி என்றும் பொதுவெளியில் பேசி வரும் நிலையில் இது பாஜக-அதிமுக தொண்டர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியது குறித்த தகவல்கள் அடங்கிய செய்திக்குறிப்பு இப்போது வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசும் போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்குள் அதிமுக-பாஜக இரண்டு கட்சிகளும் சேர்ந்தே முடிவு எடுக்கும். தே.ஜ.கூட்டணியில் அதிமுக சேர்ந்ததால் கிடைக்கும் பலன் என்பது கூட்டணிக்கு மட்டுமின்றி, அதிமுகவுக்கும் அது பலன் தரும். அதிமுக உடனான கூட்டணியில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளை பகிர்ந்து கொள்வது, தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜகவுக்கு வழங்க வேண்டிய அமைச்சரவை இடங்கள் குறித்து தக்க நேரத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போதெல்லாம், "2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதுவும் இ.பி.எஸ் தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்'' என கூறி வருகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.