தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யாவை தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டி ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு, மின் விசிறி உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் வழங்கி நிர்வாகிகள் கவுரவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் எம்ஜிஆர் காலனியில் வசிப்பவர் திவ்யா. கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் கல்வி பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இவரது தந்தை பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை விபத்தில் அகலா மரணம் அடைந்த நிலையில் தற்போது இவரது தாய் ப்ரியா நோயுற்று தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படிப்பட்ட ஒரு ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் மாணவி திவ்யா நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளதை பாராட்டி கவுரவிக்க தமிழக வெற்றிக்கழகம் முன்வந்தது.
அதன்படி தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் தாராசுரம் பிரபாகரன் ஏற்பாட்டின்படி இன்று (மே 21) மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் திவ்யா வீட்டிற்கு நேரில் வருகை தந்தனர்.
பின்னர் அவருக்கு பொன்னாடை அணிவித்து அவரை பாராட்டி வாழ்த்தியதுடன், அவருக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவியும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு, மின் விசிறி உள்ளிட்ட ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான மின்னணு சாதனங்களையும் அவர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: சுவருக்கு பள்ளம் தோண்டிய இடத்தில் 'பாம்'; மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் போலீஸ்!
மேலும் விரைவில் சாதனை மாணவி திவ்யா நடிகர் விஜயை நேரில் சந்தித்து அவரது பாராட்டுதலை பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்கள் மாணவிக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் ப்ரியா கூறும்போது, ''நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற வேண்டும் என்பதற்காகவே மிகவும் கடினமாக படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்." என்று கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.