சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜமாலியா குடியிருப்பு பகுதியில் 130 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார்.
இதன் பிறகு பந்தர் கார்டன் பகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 112 மின்மாற்றி தடுப்பான்களுக்கு அடிக்கல் நாட்டி, ராஜா தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மூலதன நிதியில் பல்நோக்கு மையம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகிய பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் பேப்பர் மில்ஸ் சாலை, சோமையா ராஜா தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வார்டு 67 அலுவலக கட்டடப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர், பெரியார் அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருந்திய (ACLS) அதிநவீன அவசர ஊர்தி (Ambulance) மற்றும் 2 BOV வாகனங்களை முதல்வர் வழங்கினார்.
இதன் பின்னர் ஜி.கே.எம். காலனி, 12 ஆவது தெருவில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளியில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள அரசு மாணவர்களுக்கு உயர்க் கல்வி பயிற்சி மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: களம் இறங்கிய வருமான வரித்துறை.. கலகலத்துப் போன 'பீடி கம்பெனி'!
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை விட அதிகமாக வெற்றி பெறுவோம்." என்றார்.
''திமுக அமைச்சர்கள் தான் மக்கள் வரிப்பணத்தை சூறையாடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளாரே'' என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அவருக்கு வேற வேலையே இல்லை'' என தெரிவித்தார்.
மேலும், ''3 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாரே" என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவசியம் ஏற்படும் என தான் கூறுகிறோம். கட்டாயப்படுத்தவில்லை" என்றார்.
இதனைத்தொடர்ந்து, "தேர்தல் பணிகள் தீவிரப்படுத்திவிட்டோம் என எடுத்துக்கொள்ளலாமா?" என்கிற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் பணியை தீவிரப்படுத்தி ரொம்பநாள் ஆகிவிட்டது'' என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின் தொடருங்கள்.