சென்னை: அனைத்து பள்ளிகளிலும், முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று, கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் கோடை விடுமுறையை கழிக்க சொந்த ஊரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருக்க மக்களின் அவதியைக் குறைக்கும் நோக்கில், கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே 2 கோடை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
1. போத்தனூர் - பரவுனி- போத்தனூர் சிறப்பு ரயில்கள்:
அதன்படி, போத்தனூர் - பரவுனி சிறப்பு ரயில் (ரயில் எண் 06055) ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய சனிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக மூன்று நாட்கள் பயணம் சென்று பீகார் மாநிலம் பரவுனியை சென்றடையும்.
அதுவே, மறு மார்க்கத்தில் பரவுனி - போத்தனூர் சிறப்பு ரயிலாக (ரயில் எண். 06056) ஏப்ரல் 29, மே 6, 13, 20, 27 தேதிகளில் இரவு 23.45 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்பட்டு கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக நான்காவது நாள் போத்தனூர் வந்தடையும்.

2. எர்ணாகுளம் - பாட்னா - எர்ணாகுளம் சிறப்பு ரயில்: ரயில் எண் 06085 - ஏப்ரல் 25, மே 02, 09, 16, 23 மற்றும் 30 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 23.00 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக நான்காவது நாள் பிற்பகல் 03.30 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரயில் எண் 06086 பாட்னா - எர்ணாகுளம் நோக்கி ஏப்ரல் 28, மே 05, 12, 19, 26 மற்றும் ஜூன் 2 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 23.45 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு நான்காம் நாள் காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.
இதையும் படிங்க: தீவிரமடையும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்! ஆதரவாக 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்பு! |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.