ETV Bharat / state

'ஜம்மு காஷ்மீரில் இருந்து மீட்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நேரில் நன்றி தெரிவித்த மாணவர்கள்! - STUDENTS THANK MK STALIN

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்ட சூழலில் ஜம்மு காஷ்மீரில் இருந்து தங்களை பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்த முதலமைச்சர் ஸ்டாலினை மாணவ,மாணவிகள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறிய மாணவர்கள்
முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறிய மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2025 at 6:29 PM IST

2 Min Read

சென்னை: ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவிற்கு எதிராக இயங்கி வந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா ட்ரோன்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு, தேசிய தொழில் நுட்ப கழகம் (NIT) உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வர குடும்பத்தினரிடம் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டது. மேலும் சென்னை அயலக தமிழர் நல ஆணையரகத்தில் 24 மணி நேர தொலைபேசி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அயலகத் தமிழர் நலத்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தார்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியின் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயர்கல்வி பயின்ற 242 மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் விமானம் மற்றும் ரயில் வாயிலாக தமிழ்நாடு வந்தடைந்தனர்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு வந்தடைந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆகியோர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஆர்.கே.நகரில் 392 குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு! 30 ஆண்டு கனவு நிறைவேறிய குஷியில் மக்கள்!

பாதுகாப்பாக தமிழ்நாடு வந்தடைந்த மாணவ மாணவிகள் இன்று (மே 20) சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அரசு எடுத்த உடனடி நடவடிக்கையினை பாராட்டி தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் மா. வள்ளலார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.