தூத்துக்குடி: துத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் உயிர் தப்பினர். கிணற்றில் விழுந்த மூன்று பேரை காப்பாற்றிய, 2 தொழிலாளர்களை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தொழிலாளர் ஒருவர் மகனின் கல்லூரி மேற்படிப்பிற்கு உதவுவதாக தெரிசித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிந்தாமணி மீரான்குளம் ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில், கடந்த 17 ஆம் தேதி, ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து, கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், வேன் தண்ணீரில் மூழ்குவதறகு முன்பாக வேனில் இருந்த 3 பேர், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிகளான பாண்டி மற்றும் லூகாஸ் ஆகிய இருவரின் உதவியால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வெளியே வந்தனர்.
இதனையடுத்து, வேன் கிணற்றுக்குள் மூழ்கி அதிலிருந்த பெரியர்கள், குழந்தை என 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையில் நன்கு பயிற்சிப் பெற்ற ஸ்கூபா வீரர்கள், கிணற்றில் இருந்த 5 பேரின் சடலத்தையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கல் குவாரியில் மண் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு! |
இந்த நிலையில், கிணற்றில் விழுந்த 3 பேரை காப்பாற்றிய, ஆடு மேய்க்கும் தொழிலாளிகளான பாண்டி மற்றும் லூகாஸ் ஆகிய இருவரையும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், இன்று (மே 20) நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதில், லூகாஸ் தனது மகனின் கல்லூரி மேற்படிப்புக்கு உதவ வேண்டுன் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையின் அடிப்படையில், எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் லூகாஸின் மகன் கல்லூரி மேற்படிப்புக்கு உதவுவதாக தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.