ETV Bharat / state

"பாம்பன் பாலத்தில் பழுது இல்லை; இன்று மட்டும் இத்தனை ரயில்கள் வந்தன" - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - PAMBAN BRIDGE CONDITION

பாம்பன் பாலத்தில் எந்தவித பழுதும் இல்லை என்றும், இன்று மட்டும் 6 ரயில்கள் மண்டபத்திலிருந்து பாம்பன் வழியாக ராமேஸ்வரம் சென்று, அவற்றுள் சில ரயில்கள் மீண்டும் மண்டபம் வழியாக திரும்பியதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் பாலம்
பாம்பன் பாலம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 7, 2025 at 11:32 PM IST

2 Min Read

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நூற்றாண்டுகள் பழமையான தூக்குப் பாலத்திற்கு பதிலாக ரூ.535 கோடி செலவில் புதிய செங்குத்து - தூக்கு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பழைய தூக்குப் பாலம் போல அல்லாமல், லிஃப்ட் போன்று செயல்படும். கடலில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 6) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் பாம்பன் தூக்குப் பாலம் சாய்வாக இருப்பதாகவும், பழுதடைந்துள்ளதாகவும் தகவல் பரவியது. கடலில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் என்பதால் இது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தெற்கு ரயில்வே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த விளக்கத்தில், ''இது வதந்தி. பொதுமக்கள் நம்ப வேண்டாம்'' என்று கூறியிருந்தது. இதற்கிடையே தெற்கு ரயில்வேயின் உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''ராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி பணிமனையில் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு நிறுவன ஆலோசனையின் பெயரில் பாலத்திற்கான கிர்டர்கள், தூக்கு பாலத்தைத் தாங்கும் கோபுரங்கள், தூக்கு பாலத்தை எளிதாக மேலே ஏற்றவும் இறக்கவும் பயன்படும் 310 டன்கள் கொண்ட இரண்டு செவ்வக எடை கட்டமைப்புகள் போன்றவை வடிவமைக்கப்பட்டன.

மேலும் இவற்றை வடிவமைக்க 350 கிரேடு இரும்புத் தகடுகள் 1450 மெட்ரிக் டன் அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கணிப்பொறி மூலம் இயந்திரங்களால் வெட்டப்பட்டு உறுதியான தரம் வாய்ந்த பற்ற வைப்புகள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. 77 மீட்டர் நீளம் கொண்ட தூக்கு பாலத்தில் 33 மீட்டர் உயர கோபுரங்கள் 28 தனித்தனி பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஒரே மேடையில் அண்ணாமலை - சீமான்; "இணைந்த கைகள்" ஆகிறதா?

கோபுரத்தின் மேல் பகுதியில் தூக்கு பாலத்தை இயக்க மின்சார மோட்டார்கள் அமைப்பதற்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தூக்கு பாலம் எளிதாக மேலே சென்று வர கோபுரத்தின் இருபுறமும் செவ்வக வடிவிலான தலா 315 டன் எடை கொண்ட ஷீவ் (பளு) தூக்குப்பாலம் மேலே செல்லும்போது கீழே வரும், தூக்கு பாலம் கீழே செல்லும் போது மேலே செல்லும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்யவும், ரயில்கள் சென்று வரும் கடல் பாலம் மற்றும் தூக்கு பாலம் மிகுந்த கவனத்துடனும் சீரிய முறையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏற்றி இறக்கும் வடிவமைப்பில் சில நேரங்களில் சற்று சாய்வுடன் காணப்படுவது இயல்பான ஒன்று. அடுத்தடுத்து இயக்கும்போது அது சரியாகி செங்குத்து தூக்குப் பாலம் கீழே வரும் போது இயல்பான நிலையில் ரயில் பாலங்களோடு பொருந்திவிடும்.

இது தொழில்நுட்பக் கோளாறு என்றெல்லாம் கூட சொல்ல முடியாது. நம் வீட்டில் முன்னர் கிணறு இறைக்கப் பயன்படுத்தும் கயிறு, இரும்புச் சுழல் கருவியுடன் தண்ணீர் இறைக்கும் போதும் கயிறு சிக்கி, அதனை நாமே சரி செய்வதைப் போன்றதுதான் இது. ஆகையால் இதுகுறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இன்று மட்டும் 6 ரயில்கள் மண்டபத்திலிருந்து பாம்பன் வழியாக ராமேஸ்வரம் சென்று அவற்றுள் சில மீண்டும் மண்டபம் வழியாக திரும்பி உள்ளன. சாதாரண இயக்க முறையில் நிகழும் இதுபோன்ற விசயங்களை பெரிதாக்குவது தவறானது' என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.