ETV Bharat / state

செங்கோட்டை - ஈரோடு, மயிலாடுதுறை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. மதுரை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு! - Madurai Davison of Southern Railway

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஈரோடு - செங்கோட்டை, செங்கோட்டை - மயிலாடுதுறை, குருவாயூர் விரைவு ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 12:08 PM IST

ரயில்
ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர் - சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை - திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, இன்று (செப்.18) முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப்.18ஆம் தேதி முதல் அக்.7ஆம் தேதி வரை (செப்.24, அக்.1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செப்.19 முதல் அக்.8ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கல்லில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.

மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்: செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப்.19 முதல் அக்.7 வரை (செப்.25, அக்.2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியே செல்வதற்குப் பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.

குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) செப்.23, 25, 26, 27, அக்.2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும். நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் (16352) செப்.26, அக்.3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப்.28-ம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.

நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - கச்சிகுடா விரைவு ரயில் (16354) செப்.28ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப்.26, அக்.3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.