ETV Bharat / state

"இந்து அறநிலையத் துறையில் இந்து அல்லாத அதிகாரிகள்": சீமான் வலியுறுத்தல் - SEEMAN HINDU ARANILAYA THURAI

இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துகளை நிர்வகிக்க இந்து அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்
சீமான் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 13, 2025 at 3:32 PM IST

2 Min Read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துகளை நிர்வகிக்க இந்து அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதை விமர்சிக்கும் வகையில், சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வக்ஃப் வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வக்ஃப் வாரியத்துக்கு சொத்துகளை வழங்க முடியும். வக்ஃப் சொத்துகளை 12 ஆண்டுகள் ஒருவர் பயன்படுத்தினால், அவை பயன்படுத்துபவர்களுக்கே சொந்தம்.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல திருத்தங்கள் இந்த சட்டத்திருத்ததில் உள்ளன. இதனை ஒருகாலும் ஏற்கவே முடியாது. இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனத் தெரிந்து தான் இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வைத்தே இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க நினைக்கிறார்கள்.

வக்ஃப் வாரியத்தில் பிரச்னை இருந்தால், அதில் தலையிட்டு குற்றம் செய்தவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வரலாம். ஆனால், அதை விட்டுவிட்டு, நிலத்தை கையகப்படுத்தி பெருமுதலாளிகளுக்கு கொடுப்பதற்காகவே சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அச்ச உணர்வு எழுந்துள்ளது.

வக்ஃப் வாரிய நிலங்களில் மட்டும்தான் ஆக்கிரமிப்பு நடக்கிறதா? இந்து கோவில்களில் ஆக்கிரமிப்பே இல்லையா? வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சட்டம் இயற்றி இருக்கிறார்களே.. அப்படியென்றால், இந்து அறநிலையத்துறையின் சொத்துகளை நிர்வகிக்க இந்து அல்லாத அதிகாரிகளை நியமியுங்கள். அப்படி நியமித்தால், சமூக நல்லிணக்கம் என்று கூறலாம்.

கோயில் சொத்துகளை மக்களுக்கு கொடுப்பதுதான் இறை சேவை. ஆனால் அப்படி நடப்பதில்லை. வாக்குகளை மட்டுமே குறிவைத்து ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். இதை இப்படியே விட்டால், வக்ஃப் சொத்துகளை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துவிடும். அரபு நாடுகளில் இந்து கோயில் உள்ளது. மாட்டுக்கறி ஏற்றுமதியில்தான் இந்தியாவுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ்கிறோம் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல் 40 முனை போட்டியாக இருந்தாலும் என் முனைதான் கூர்முனை எனக் கூறிக்கொள்கிறேன். நான் மக்களோடு தான் நிற்பேன். மக்களோடுதான் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கும் என்று சீமான் கூறினார்.

முன்னதாக, பெண்கள் குறித்து பொன்முடி இழிவாக பேசியது, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியவை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சீமான் மழுப்பலாக பதிலளித்துச் சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.