திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவரது மனைவி சரிதா. தம்பதியின் கடைசி மகன் வெற்றிமாறன் (16). ஆம்பூரில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சரிதா தனியாக கஷ்டப்பட்டு மகனை பராமரித்து வந்துள்ளார். இவர்கள் வசித்து வந்த ஓட்டு வீடு பழுதடைந்து விரிசல் ஏற்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் இடிந்து, கீழே விழும் அபாயத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஜூன் (23) வெற்றிமாறன் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் தன்னுடைய வீட்டில் சாப்பிட சென்றபோது ஏற்கனவே விரிசல் ஏற்பட்ட சுவர் எதிர்பாராதவிதமாக திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி வெற்றிமாறன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து சரிதா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
1. இதையும் படிங்க: பெரியார், அண்ணா குறித்து வீடியோ: "எடப்பாடி பழனிசாமியை தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்" - அமைச்சர் டிஆர்பி ராஜா!
2. இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன் சிலை, வெள்ளி வேல் பரிசு - எஸ்.பி வேலுமணி விளக்கம்!
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சிறுவன் வெற்றிமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏற்கனவே கணவன் உயிரிழந்த நிலையில், மகனையும் பறிகொடுத்து விட்டு நிற்கும் பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்