தஞ்சாவூர்: காசவளநாடு, கோவிலூரில் ஜம்புகேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு தனது சொந்த செலவில் உபயமாக வழங்கிய தேரின் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா பேசுகையில், "தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக திமுகவினர் கூறினாலும், எதார்த்தம் அவ்வாறு இல்லை, இதுவரைக்கும் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை, ரூபாய் ஆயிரம் உதவித்தொகை சிலருக்கு கொடுத்துவிட்டு அந்த வீட்டில் இருந்து ஆண்டுக்கு ரூபாய் 7 ஆயிரம் 8 ஆயிரம் என வசூல் செய்து விடுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வரும் போது வீட்டு வரி, மின்சார கட்டணம் உயர்த்துவது வழக்கம். கடந்த 2008ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட வரிகள், ஜெயலலிதா ஆட்சியில் உயர்த்தப்படவில்லை. இப்போது சதுர அடி கணக்கில் வரி இரட்டிப்பாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வேலைகளை செய்து வருகிறேன்” என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு தான் லீடர் என ஸ்டாலின் கூறியதற்கு, ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முதன்மையாக இருந்தன. தற்போது ஸ்டாலின் விளம்பரத்துக்காக சொல்வது போல் உள்ளது. வளர்ச்சியின் பின் தங்கிய மாநிலங்கள் தற்போது முன்னேறி உள்ளன. இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள்” என்றார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் என்ற கேள்விக்கு, "தேர்தல் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் அமைப்பது தான், கூட்டணிக்கு முன்பு கட்சிகள் எதிரும் புதிருமாக இருக்கும். ஆனால் ஒரு நாள் மேடையில் ஒன்றாக நின்று தேர்தல் கூட்டணி என கூறுவர், அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பது தான், அவ்வாறு நினைப்பதில் தப்பில்லை.
இதையும் படிங்க: "எங்க ஊரு காவிரிக்கு பக்கத்துல இருந்தும் குடிக்க தண்ணி இல்ல..." எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, எங்கெல்லாம் காப்பகம் உள்ளதோ அந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என அறிந்து அதை கண்காணிப்பது அவசியம் என்பதை இந்த விவகாரத்திற்கு பிறகாவது அரசு புரிந்து கொள்ள வேண்டும். காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ரோடு ஷோ சென்று வருவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த 2026 தேர்தலில் அதற்கான சரியான பாடம் கிடைக்கும்” என்று கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.