சென்னை: கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இலகுவாக பயணம் செய்ய ஏப்ரல் 19 முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கருத்துக்கேட்டுள்ளது.
பயணிகள் எந்தெந்த நேரங்களில் ரயில் சேவை வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவற்றை குறிப்பிட்டு வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்புமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘63747 13251’ என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் செய்யலாம்.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ஏசி ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும் காரணங்களால் எந்தெந்த நேரங்களில் இந்த ஏசி லோக்கல் ரயிலை இயக்கலாம் என ரயில்வே நிர்வாக மக்களிடம் கருத்து கேட்கலாம் என முடிவெடுத்துள்ளது.
ஏசி ரயில்களின் விவரம்:
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பும் ரயில் எண் - 49003 காலை 8.35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்கமாக ரயில் எண் - 49004 செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு கிளம்பி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை காலை 10.30 மணிக்கு வந்தடையும்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3.45 மணிக்கு கிளம்பும் ரயில் எண் - 49005 செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மாலை 5.25 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக ரயில் எண் - 49006 செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கிளம்பும் ரயில், இரவு 7.15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
இதையும் படிங்க |
யாருகிட்ட பணம் கேக்குற..? டோல்கேட்டை அடித்து நொறுக்கிய கும்பல்! தூத்துக்குடியில் பரபரப்பு |
அதேபோல, ரயில் எண் 49001 சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக ரயில் எண் - 49002 தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு கிளம்பி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 6.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணமாக 35 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக ரூ.105-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.