ETV Bharat / state

உயிரைப் பறித்த திருமணம் மீறிய உறவு? தனியார் பள்ளி காவலாளி கொலையில் நடந்தது என்ன? - VANIYAMBADI MURDER

வாணியம்பாடி அருகே திருமணம் மீறிய உறவிற்கு தடையாக இருந்ததாக கூறி தனியார் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி காவல் நிலையம்
வாணியம்பாடி காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 9, 2025 at 2:06 PM IST

2 Min Read

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது இஃர்பான். இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முகமது இஃர்பான் தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 8) காலை இஃர்பான் மிதிவண்டியில் பணிக்காக பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர் முகமது இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி காவல்துறையினர், முகமது இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திருப்பத்தூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு தலைமையிலான காவல்துறையினர், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, முகமது இஃர்பானை கத்தியால் குத்தியது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி காவலாளியை கொலை செய்த ரபிக் பாஷா
பள்ளி காவலாளியை கொலை செய்த ரபிக் பாஷா (ETV Bharat Tamil Nadu)

அந்த விசாரணையில், முகமது இஃர்பான் மனைவிக்கும், அவரது தங்கை கணவரான திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த ரபிக் பாஷா என்பவருக்கும், திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது இஃர்பான், ரபிக் பாஷாவை பலமுறை கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆஜிரா, ரபிக் பாஷாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். அதனை தொடர்ந்து ஆஜிரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சில மாதங்களில், ஆஜிரா ஊர் திரும்ப உள்ள நிலையில், உறவிற்கு இடையூறாக உள்ள ஆஜிராவின் கணவரான முகமது இஃர்பானை சல்மான் கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்! தங்கை மகனை கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாய் மாமன் சிக்கியது எப்படி?

இதனையடுத்து திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், பெங்களூரு விரைந்து அங்கு தலைமறைவாக இருந்த ரபீக் பாஷாவை கைது செய்து, வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ரபீக் பாஷா மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.