ETV Bharat / state

"கருணாநிதி இருந்தால் 'இதை' முடித்திருப்பார்.. ஸ்டாலினுக்கு மனம் இல்லை" - அன்புமணி ஓபன் டாக்! - ANBUMANI RAMADOSS

''முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையிலே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருப்பார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனம் இல்லை" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2025 at 10:24 PM IST

Updated : May 11, 2025 at 11:13 PM IST

5 Min Read

செங்கல்பட்டு: சென்னை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 'சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு' இன்று (மே 11) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும் போது, ''வன்னியர் சமுதாயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயம்.

இந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வன்னியர்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டை கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு பாரம்பரிய விழா. இது ஒன்றும் அரசியல் விழா கிடையாது. இந்த நேரத்தில் என்னுடன் என்னுடைய அண்ணன் காடுவெட்டியார் குரு இல்லாதது மனசுக்கு வருத்தம். காடுவெட்டியார் மறையவில்லை நம்முடன் உள்ளார். அய்யா காலத்தில் நம்முடைய சொந்தம் ஆள வேண்டும் என்பது அவரது கனவு. அதை நிறைவேற்றுவது இங்கு வந்திருக்கின்ற லட்சக்கணக்கான நமது சொந்தங்களின் கடமை.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என, பாமக கோரிக்கை வைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறார். திமுக பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்கிறது.

கடந்த 1957-ல் திமுக 15 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதில் 14 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள். 1962 ல் திமுக 50 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதில் 45 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள்.

கடந்த 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது 138 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதில் 92 தொகுதிகள் வன்னியர் அதிகம் இருக்கும் தொகுதிகள். இப்படி திமுகவை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர வைத்த சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. திமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் சமுதாயம் வன்னியர் சமுதாயம்.

23 சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவிற்கு வன்னிய சமுதாயம் தான் கொடுத்துள்ளது. ஆனால் இந்த சமுதாயத்திற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை. இது வன்னியர் சமுதாயத்திற்கு அல்ல, தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம். தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள அனைத்து சமுதாயங்களையும் முன்னேற்ற தமிழக அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

எம்.பி.சிக்கு வழங்கப்படும் 20 சதவீதத்தில் வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழ்நாடு அரசு பொய் சொல்லி வருகின்றது. ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களின் பங்கு மிக மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு காவல் துறையில் 109 உயரதிகாரிகளில் ஒருவர் மட்டும் வன்னியர் உள்ளார்.

எம்.பி.சி உருவாக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிறது. இதில், தகுதியானவர் ஒரே ஒருவர் தான் இருக்கிறாரா? தமிழ்நாடு அரசு சொல்வதைப் போல 12, 13% கிடைப்பது உண்மையானால் இந்த நேரம் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் வந்திருக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக வன்னியர் சமுதாயத்தில் இருந்து முதல் ஐஏஎஸ் அதிகாரி வந்துள்ளார். தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் முதலமைச்சருக்கு இதைப் பற்றிய எந்த கவலையும் கிடையாது.

வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல. இதேப் போல, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களையும் முன்னேற்றத்திற்கு கொண்டு வர தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்களது அண்ணன் நான் இருக்கிறேன். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு நல்ல படிப்பையும், வேலைவாய்ப்பினை நான் வாங்கித் தருகின்றேன். நாம் ஆள வேண்டும். நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம்.

வீராணம் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, வெலிங்டன் ஏரி, மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள். இந்த மண்ணை நமது பாட்டன், பூட்டன் பாதுகாத்து இந்த மண்ணை காத்து வைத்தான். இந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் நாம்.

இன்று நம்மிடம் இருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு குடிகாரனாக மாற்றி விட்டார்கள். பஞ்சாயத்துத் தலைவருக்கு இருக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு இல்லையா?

இதையும் படிங்க: ''காவல்துறை கெடுபிடி இல்லாமல் இருந்தால் பிழைக்கலாம்'' - காத்திருக்கும் கூவாகம் வியாபாரிகள்!

புள்ளியியல் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் தன் கிராமத்தில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் கல்வி கற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்? என்பதை கணக்கிட உரிமை உள்ளது.

முதலமைச்சருக்கும் அது போன்று மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது. ஆனால் முதலமைச்சர் கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார். ஆனால் ஒன்று நான் சொல்கிறேன். இன்று மட்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயமாக சமூக நீதி அடிப்படையிலே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு தான் மனம் இல்லை.

அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ. அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார். என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள். அதற்காகத்தான் நாம் இங்கு கூடி உள்ளோம். தமிழகத்தில் உள்ள கிராமங்களை நோக்கி நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்." என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

"நான் நினைத்திருந்தால் கவர்னர் ஆகியிருப்பேன்" - மருத்துவர் ராமதாஸ்!

இதன் பிறகு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, ''நாம் நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. அந்தப் போராட்டத்துக்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

நான் இப்போது கேட்கிறேன். இந்தியாவிலேயே வேறு யாராவது ஒரு மனிதர் போராட்டம் செய்திருக்கிறாரா? யாரும் இல்லை. என்னைப் போன்ற யாருமில்லை. ஆனால் நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததினாலே எனக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆள் இல்லை. ஊடகங்கள் மறைத்தார்கள். இப்பொழுது கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் சொல்லுகிறேன். என்னைப் போன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய மக்களுக்கு இட ஒதுக்கீடாக இருந்தாலும், வேறு சமூக நீதியாக இருந்தாலும் உழைத்த ஒரு தலைவர் நான். என்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. இந்தியா கண்டதுண்டா? என்று புஷ்பவனம் குப்புசாமி பாடினாரே. யாராவது இருக்கிறார்களா? அப்படி இந்தியாவிலே யாருமே இல்லை யாருமே இல்லை என்னை தவிர.

நான் இதை பெருமையாக சொல்லிக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஏனென்றால் எத்தனை போராட்டங்கள்? 45 ஆண்டு காலம் தொடர்ந்து உங்களுக்காக உழைத்து வருகிறேன். 95 ஆயிரம் கிராமங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று தமிழ்நாடு முழுவதும் என் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு உழைத்தேன். ஓடி ஓடி உழைத்தேன். குடும்பத்தை மறந்தேன்.

மூன்று ரூபாய் ஊசி போட்டு ஐந்து நாள் டாக்டர் பீஸ் வாங்கி சம்பாதித்து அதை வீட்டிற்கு கொடுத்துவிட்டு ஐந்து நாள் சம்பாத்தியத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று, கல்லிலும் முள்ளிலும் சாப்பாடு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் இரவு பகலாக இந்த மக்களுக்காக பாடுபட்டேன். பாடுபட்டு வருகிறேன். ஆனாலும் இந்த மக்கள் நன்றி உள்ள மக்கள்.

நீங்கள் செய்யப் போவதெல்லாம் நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய பேச்சை நீங்கள் கேளுங்கள். என்னுடைய பேச்சை கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால் நான் இந்தியாவிலேயே கவர்னராக இருந்திருப்பேன்.

இந்தியாவிலேயே பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன். தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். எல்லாவற்றையும் செய்திருப்பேன். ஆனால் எனக்கு அந்த ஆசை இல்லாமல் போய்விட்டது. மக்களுக்காக வாழ்ந்தேன். மக்களுக்காக வாழ்கிறேன். உங்களுக்காக வாழ்கிறேன். உங்களுக்காக வாழ போகிறேன்.

ஒரு முறை சொல்லி இருக்கிறேன். தமிழ்நாடு முதல்வர் தம்பி ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லி இருக்கிறேன். இந்த ஊமை ஜனங்களுக்காக தம்பி உங்களை விட்டால் யார் இருக்கிறார்? அதனால் இந்த 10.5% கொடுங்கள் என்று கோட்டைக்குச் சென்று வாதாடினேன்." என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : May 11, 2025 at 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.