ETV Bharat / state

முதல்வரிடம் அளித்த அறிக்கைகளில் இருப்பது என்ன? திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்! - PROF JEYARANJAN

வேளாண் துறையை பொறுத்தவரை புதிதாக இளைஞர்கள், இளம் பெண்கள் வருவதில்லை. வேளாண்மை அல்லாத துறைகளுக்கே அவர்கள் செல்கிறார்கள் என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்

மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி
மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 9, 2025 at 8:46 PM IST

2 Min Read

சென்னை: 2030-க்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என அறிக்கையாக வழங்கியுள்ளதாக தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில திட்டக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரிடம் அளிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக
தமிழ்நாடு மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நான்கு அறிக்கைகளை மாநிலத் திட்டக் குழு சார்பில் முதல்வரிடம் இன்று வழங்கினோம். கிராமப்புறங்களில் வேளாண் துறை அல்லாத வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளது? என்று 12 கிராமங்களில் ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வுகளை மீள் ஆய்வு செய்தோம். அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 15 முதல் 34 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக என தெரிய வருகிறது.

மேலும் வேளாண் அல்லாத வேலைகளில் 75% ஆண்களும் 50% பெண்களும் உள்ளனர். வேளாண் துறையை பொறுத்தவரை புதிதாக இளைஞர்கள், இளம் பெண்கள் வருவதில்லை. வேளாண் அல்லாத துறைகளுக்கே அவர்கள் செல்கிறார்கள்.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030- தமிழ்நாடு தொலை நோக்கு ஆவணம் என்பது 2030-க்குள் இலக்குகள் அடைய என்ன செய்யவேண்டும் என அறிக்கைகளாக வழங்கியுள்ளோம்.

வாகன உற்பத்தித் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதிர் காலத்திலும் முன்னணியில் இருக்க என்ன செய்ய வேண்டும்? அது குறித்தும் அறிக்கையில் விளக்கியுள்ளோம்.

உயர் கல்வியில் உயர்ந்த நிலையில் உள்ளோம். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் சம்பளம் அதிகமுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அறிக்கையில் கூறியுள்ளோம். உலகளவில் ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவை நோக்கி நகர்கின்றன. அந்த வகையில் தமிழகத்தை நோக்கி வருங்காலங்களில் பெரும் நிறுவனங்களை எப்படி ஈர்ப்பது? என்பது குறித்தும் ஆலோசனைகளை அளித்துள்ளோம். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை அடையும் போது அது எல்லோருக்கும் ஆனதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் முதலிடத்தில் உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு என்பது குறைவாக உள்ளது. விவசாயத்தில் உற்பத்தி குறையவில்லை. விவசாயம் பார்க்கிறவர்கள் கூடுதல் வேலையையும் பார்க்கிறார்கள். அது தற்போது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும்.

வருங்காலங்களில், பாலிடெக்னிக் பாடமுறைகள் மாற்றம் உள்ளிட்டவற்றை கொண்டு வருகிறோம். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் அமைய உள்ளது. மேலும் நாங்கள் தாக்கல் செய்த அறிக்கையானது சமூகநீதி கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை விவரிக்கிறது.

இந்த அறிக்கைகள் விளிம்பு நிலை சமுதாய மக்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சமமான வளர்ச்சியை வலியுறுத்துகிறது. தொழிற்துறை வளர்ச்சியை சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக மாற்ற ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்" என்று பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.