ETV Bharat / state

அடுத்தடுத்து பழுதான விமானங்கள் - காத்திருந்து கடுப்பான பயணிகள்! - PASSENGERS ARE WAITING IMPATIENTLY

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து பழுதானதால் பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 5:16 PM IST

2 Min Read

சென்னை: டெல்லி, மும்பை செல்ல வேண்டிய விமானங்கள் அடுத்தடுத்து பழுதானதால், பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்துக்கு உள்ளேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய 172 பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் இருந்து கிளம்பும் முன்பாக, விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று விமானி சரி பார்த்தார். அப்போது தான் இயந்திரக்கோளாறு நேரிட்டிருப்பதை கண்டறிந்தார். இதனால், இப்போதைக்கு இந்த விமானம் கிளம்பாது. எனவே, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய ஓய்வறைகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தகவல் அளிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால், அவசர வேலையாக டெல்லிக்கு பெரும்பாலான பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.

இதையும் படிங்க:அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ்!

பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கியதும் விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஏர் இந்தியா சார்பில் பயணிகளுக்கு தரப்பட்ட அறிவிப்பில், விமானத்தை பழுது நீக்குவதற்கு தாமதம் ஆகும் என்பதால் மாலை 4 மணிக்கு மேல் டெல்லிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேலும் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின்னர் அதாவது 5 மணிக்கு இந்த விமானம் டெல்லி புறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிங்கப்பூரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மாலை 5.30 மணிக்கு தான் சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இந்த விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட இருந்தது. இதனால், அதில் பயணிக்க 167 பேர் காத்திருந்தனர். ஆனால், இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே மும்பை செல்ல வேண்டிய 167 பயணிகள் விமான நிலையத்தில் ஓய்வறைகளில் தவித்துக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து இயந்திர கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.