ETV Bharat / state

ஆந்திரா - சென்னை கஞ்சா கடத்தல்..தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது! - Andhra to Chennai Ganja smuggling

Andhra - Chennai Ganja smuggling: ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மதுரை தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 10:49 PM IST

கைது செய்யப்பட்ட அரவிந்த்சாமி
கைது செய்யப்பட்ட அரவிந்த்சாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த உடற்கல்வி ஆசிரியரை வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

விசாரணையில், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, நந்தி ஓடை மேற்கு மாட வீதியில்,சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிதிரிந்த இளைஞரை வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர். இதில், அவர் மதுரை சேர்ந்த அரவிந்த்சாமி (வயது 29) என்பதும், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.மேலும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இவர் கடந்த 5ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் சென்று 7 கிலோ கஞ்சா வாங்கியுள்ளார். இதனை, போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் பேக்கிங் செய்து ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து திருவொற்றியூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், போலீசார் அவரை விசாரித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான அரவிந்த்சாமி மீது மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒடிசா டூ சென்னை ரயில் மூலம் கஞ்சா கடத்திய வாலிபர் கைது! - சென்னை குற்றச் செய்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.